India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மாவட்டம் இஞ்சிமேடு பகுதியில் மணிச்சேறை உடையார் கோயில் அமைந்துள்ளது. நவபாஷாண லிங்கமாக அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
ஸ்டெர்லைட் ஆலை வேதிப்பொருட்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பல லட்சம் பேர் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என இன்று நெல்லையில்ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜாண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.*உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணவும்*
சென்னை போரூர் – பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓடுதளத்தில் வயர் அறுந்து விழுந்து தீப்பொறி கிளம்பியதால் சோதனை ஓட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு நடைபெறுவது வழக்கம் எனவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாநகரில் இன்று(20.3.25) இரவு 11 முதல் காலை 6 மணி வரை சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்எஸ் நிஷா தலைமையில், வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது குறைகளை கூற வந்த பழங்குடியின மக்களிடம், அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து, அதற்கான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். உடன் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் புதிய தேரோட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், தேரோட்டம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அரசாணையினைப் பின்பற்றவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
வெம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜீவகன் ஓய்வு பெற்ற போலீஸ். இவரது மகன் வினோத்குமார் (49). காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார்.காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் வெம்பாக்கத்தில் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.இறந்த ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து 21 குண்டுகள் முழங்கவீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் விண்ணப்பங்களை பெற்று வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
கொப்பரை விலை அதிகமாக உள்ளதால் குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் இயங்கி வரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் கடந்த மூன்று மாதமாக உற்பத்தி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரம் கூட்டு மையத்தில் உள்ள அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.