Tamilnadu

News March 20, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 20, 2025

தமிழ்நாட்டில் செய்வதை போல புதுச்சேரியிலும் செய்ய கோரிக்கை

image

இன்று (20-3-25) சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய நேரு எம்எல்ஏ, தமிழகத்தில், பென்சனர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற ரூ.70 கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் இதை நடைமுறைப்படுத்த அஞ்சல் துறையின் India Post Payments Bank உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பென்ஷனகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்றார்.

News March 20, 2025

திருமணமான ஆண்களுக்கான தூத்துக்குடி ஸ்பெஷல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எவ்வாறு மாசி கருவாடு புகழ்பெற்றதோ அதே அளவு தூத்துக்குடி மாசி கருவாடு புகழ்பெற்றது சுவையானது. இங்கு வரிசூரை மீனை பதப்படுத்தி மாசி கருவாடு தயார் செய்கிறார்கள். இதனை குழம்பு, தொக்கு, பொரியல் என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். சப்த தாதுக்கள் கொண்டதாக கருதப்படும் இந்த மாசி கருவாடு திருமணமான ஆண்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய உணவாகும்.*புது தகவல்னா ஷேர் பண்ணுங்க*

News March 20, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் போது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.20 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 20, 2025

துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்: அமைச்சர்

image

“திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்” என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

News March 20, 2025

மதுரை மாநகரில் உள்ள குழந்தைகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாநகர பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை குறைத்து,குழந்தைகளுக்கு வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யவும் ,புகார் தெரிவிக்கவும்  குழந்தைகள் உதவி எண் 1098 உதவிக்கு அழைக்கலாம் என மதுரை மாநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 20, 2025

இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 20, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2025

ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணி முடிவடையும் – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.

News March 20, 2025

நெல்லை ESIC மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை வண்ணார்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனையில் வரும் 28-ம் தேதி வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. மருத்துவ புற்று நோயியல் பகுதி நேர வேலை வாய்ப்பும், முழு நேர வேலை வாய்ப்பான எமர்ஜென்சி, விபத்து பிரிவு, ரேடியோலாஜி பிரிவு,மற்றும் பொது மருத்துவத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 09/30 மணி முதல் 10.30 வரை நடக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!