Tamilnadu

News March 21, 2025

நெல்லை மாவட்டத்திற்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்,நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லை கோட்டத்தில் 362 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். மார்ச்.21-ஏப்ரல்.21 வரை விண்ணப்பிக்கலாம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க*

News March 21, 2025

வேலூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சித்தூர் மாவட்டம் யாதமரி அடுத்த பட்டரபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகன் ஜெயச்சந்திரன் (21). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, பரதராமி அடுத்த எல்லையம்மன் கோவில் அருகில்  ஆந்திராவிலிருந்து மக்காசோளம் ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்தில் ஜெயச்சந்திரன் உயிரிழந்தார்.

News March 21, 2025

சென்னையில் தூத்துக்குடி ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்!

image

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. இவர் கடந்த ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது போலீசார் மீது மிளகாய் பொடி தூவி தப்பினார். இந்நிலையில், கிண்டியில் பதுங்கியிருந்த மகாராஜாவை போலீசார் இன்று(மார்ச் 21) சுத்துப்போட்ட நிலையில், அவர் தப்பி ஓடவே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

News March 21, 2025

சாக்கடை சுத்தம் செய்ய ரூ.140 கோடியில் நவீன இயந்திரங்கள் 

image

புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை. நகர பகுதியில் Smart city திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது.‌ இது முழு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி முழுவதும் 140 கோடி ரூபாய் செலவில் இதே முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை என அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

News March 21, 2025

சேலம் வழியாக ரம்ஜான் சிறப்பு ரயில்

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மார்ச் 28, ஏப்ரல் 04 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சாலிமருக்கும், மார்ச் 31, ஏப்ரல் 07 தேதிகளில் சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் (06081/06082) அறிவிப்பு. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

புதுச்சேரி அரசு சார்பில் 20 லிட்டர் தண்ணீர் இலவசம்

image

புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

News March 21, 2025

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரண வலி தணிப்பு சிகிச்சைப் பிரிவில் 2 தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடமாகும். இந்த பணி 11 மாதங்களுக்கு மட்டுமே. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என கல்லூரி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News March 21, 2025

தேனியில் 26 டன் ரேஷன் அரிசி பதுக்கல்

image

அல்லிநகரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோடவுனில் 26 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பதுக்கியதை, வழங்கல் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரவிக்குமார், துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.

News March 21, 2025

பிரபல ரவுடி சுட்டிபிடிக்கப்பட்டார்

image

சென்னையில் பிரபல ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்யும்போது, அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.

News March 21, 2025

ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் (e-KYC) அறிமுகம்

image

ஈரோடு, அஞ்சல் துறை மூலம் சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது தொழில் நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி, படிவம் இன்றி எளிமையாக பரிவர்த்தனை மேற்கொள்ள, ஆதார் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை (e-KYC) பரிவர்த்தனை திட்டம் அறிமுகமாகி உள்ளது. இவ்வசதி, ஈரோடு கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!