India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்ணைப் பயன்படுத்தாமல் நீரியல் முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக சாகுபடி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பஸ் நிலையத்தில் முதல் முறையாக பிடிபட்டது. இது நீலகிரி காவல் துறையையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை கஞ்சா 1 கிலோ ரூ.1 கோடி மதிப்புடையது என்பதால் காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவுசெய்யப்பட்டு ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்று, அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி கிலோ ரூ.104 ஆக குறைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியில் வசிக்கும் இளங்கோ (32), காஞ்சிபுரம் நகரில், மாட்டு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதியில் நேற்று (மார்.20) வியாபாரம் செய்தபோது, உதயா (19) என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கத்தியை காட்டி ரூ.1,000 பணத்தை பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி உதயாவை அதிரடியாக கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் அடுத்த பூனையானுர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்பவருக்கு இனியா ஸ்ரீ என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது, இந்த குழந்தைக்கு நேற்று மூச்சு திணறல் அதிகமானதால், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( பொ) செளந்தரராசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (மார்ச்.22) சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாளாகும். தமிழ்நாடு அரசு புதிய நாட்காட்டியின்படி முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் விதமாக சனிக்கிழமை முழு வேலைநாள் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் SHARE பண்ணுங்க..
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களை அழைக்கவும். ஷேர் பண்ணுங்க
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க..
திருவள்ளூர் – திருத்தணி, நார்த்தவாடா பகுதியில் இன்று (மார்.21) காலை லோகேஷ் (19) என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பல் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.