India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்காணல் முகாம் நாளை 6ஆம் தேதி காலை நடக்கிறது. ஒட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம் உதவியாளர் பணியிடத்திற்கு பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம்,ஏ என்எம் படித்த 30 வயதுக்குட்பட்ட ஆண் பெண் விண்ணப்பிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE பண்ணுங்க.
சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
நாமக்கல் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். யாருக்காவது பயன்படும் ஷேர் பண்ணுங்க.!
மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..
புதுக்கோட்டை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் கோவிலில் இருந்த விலை உயர்ந்த வெள்ளி விளக்குகள், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரி அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் வேளாண்மை படித்த மாணவர்கள் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க https://tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு வேளாண் அலுவலர் தரக்கட்டுப்பாட்டு 9443232238 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஜெயந்திரா சரஸ்வதி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி குனவதி, கைப்பந்து போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கி, தேசிய அளவிலும் பங்கேற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டி பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பரிசளித்தனர். மேலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்:
▶️ வழுதாவூர், திருமுருகன்
▶️ ரெட்டணை. பாலசுந்தரம்
▶️ மேல் ஒலக்கூர், இளங்கோவன்
▶️ வளவனுார்,முருகன்
▶️ கப்பை, அருமைசெல்வம்
▶️ செ.பூதுார், விஜயலதா
▶️ மேல்நெமிலி, லட்சுமி நாராயணசாமி
▶️ பக்கிரிதக்கா, ராஜலட்சுமி
▶️ ரெட்டணை, மாசிலாமணி
▶️ ராஜாம்புலியூர், நமச்சிவாயம்
மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.