India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று செந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படுகின்றன. செந்துறை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் பொன்பரப்பி நடைபெறும். இம்முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையைப் பதிவு செய்து விரைவான தீர்வுகளை வழங்க உள்ளனர்.
பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.
வேலூர்: காட்பாடி கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று(செப்.4) மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற சென்னை தினகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவலைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முதல் மெட்ரோ ரயில் உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலாம்பூர் வரையிலும், கோயம்புத்தூர் சந்திப்பு முதல் வலியம்பாளையம் பிரிவு வரையும் இயக்கப்படும் என கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் இன்று தகவல் தெரிவித்துள்ளார். முதல் மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும் இரண்டு வழித்தடங்களின் நீளம் 40 கி.மீ : இதற்காக செய்யப்பட உள்ள செலவு ரூ.10,740 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகளுக்காக தங்க தேர் இழுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தங்கத்தேர் இழுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
திண்டுக்கல்: வேடபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (22). இவர் கோபால்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கொல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவ்யா(22) ஆகியோரும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேடப்பட்டி பகுதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேற்று மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவன் பி.கோபிபிரசாந்த், புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்தமானில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து கோப்பைகளை வென்றுள்ளார்.
▶️டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது▶️மேலும் 4,000 ரூபாய் மதிப்புள்ள,12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது▶️இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிகள் கருத்தரித்த,12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.SHAREit
“ஊட்டியில் நடந்த பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் கூறுகையில், ”பேரிடர், பருவ மழை காலங்களிலும் சிக்கும் போது பொதுமக்கள் அச்சமடைய கூடாது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், அவசர நேரங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு பலரை காப்பாற்ற முன் வரவேண்டும்,” என்றார்.”
Sorry, no posts matched your criteria.