Tamilnadu

News September 5, 2025

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், உணவு பாதுகாப்பு மற்றும் நியமன ஆணையத்தால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கை டுத்தாமல், மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் தன்மை பொருட்களை மட்டும் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.50,000 வழங்கப்படுகிறது.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கந்தசாமி அறிவிப்பு..SHARE பண்ணுங்க!

News September 5, 2025

எண்ணூர் அருகே பயங்கர விபத்து

image

எண்ணூர், கத்திவாக்கம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மாநகர பேருந்து ஓட்டுனர் சங்கர் மற்றும் பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து எண்ணூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் பாபு தலைமறைவான நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 5, 2025

சேலம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!

News September 5, 2025

மதுரை மேயர் கணவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

image

மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகினர். இவர்களில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட 7 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இந்நிலையில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரனின் ஜாமின் மனு மீதான விசாரணையை செப்.10ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News September 5, 2025

காஞ்சிபுரத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

▶️பெருநகர் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளி- ஆறுமுகம்
▶️அய்யம்பேட்டை மேல்நிலைப்பள்ளி- இளவரசி
▶️மாகாண்யம் உயர்நிலைப் பள்ளி- பாலாஜி
▶️திருமுடிவாக்கம் மேல்நிலைபள்ளி- செல்வகுமார்
▶️வழுதம்பேடு தொடக்கப்பள்ளி- ஹேமலதா
▶️தேனம்பாக்கம் நடுநிலைப்பள்ளி- வரதராஜன்
▶️மருதம் நடுநிலைப்பள்ளி- திருநாவுக்கரசு
▶️காட்டுபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி- ஆயிஷா சித்திகா
▶️வேண்பாக்கம் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி- கற்பகம்

News September 5, 2025

தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதில் செப்.9 அன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News September 5, 2025

கடலூர்: 6 போலீசார்கள் பணியிடை நீக்கம்

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கார்த்திக் ஆகிய 6 பேரையும், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி உமா பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

News September 5, 2025

பெரம்பலூர்: 633 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட நிதி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள், கலைக்கூத்தாடிகள், நரிக்குறவர்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.21.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர்
மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

மயிலாடுதுறை: தமிழ் கனவு நிகழ்ச்சி தொடங்கி வைத்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை ஏஆர்சி விஸ்வநாதன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சொற்பொழிவாளர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தர்மபுரம் ஞானாம்பிகை கல்லூரி முதல்வர் ரேவதி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

News September 5, 2025

குமரி: சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

குமரி சுற்றுலா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சுற்றுலா விருது உலக சுற்றுலா தினமான (செப் 27) வழங்கப்பட உள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tntourisum.com என்ற இணையதள முகவரியில் (செப் 15) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!