Tamilnadu

News September 4, 2025

நீலகிரி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

நீலகிரி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30நாட்களில் பெயர் மாறிவிடும்.(SHARE IT)

News September 4, 2025

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகள்.

image

சேலம் மாநகர இரவு நேர காவல் அதிகாரிகளின் விவரம் காவல் உதவி ஆணையாளர் வி சரவணன் தெரிவித்துள்ளார், சேலம் டவுன்சாரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கான காவல் அதிகாரிகளும் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அரை தொலைபேசியில் 100 0427 221 0002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 4, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

திருப்பத்தூர் நகர் பகுதியில் 6 ஆம் தேதி மின்நிறுத்தம்

image

திருப்பத்தூர் மின்பகிர்மானம் 110/33 கி.வோ துணை மின்நிலையத்திற்குட்பட்ட திருப்பத்தூர் டவுன், ஹவுசிங்போர்டு, ஆசிரியர்நகர் திரியாலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 06.09.25 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகாரணமாக காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத்து அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும் அறிவுறுத்தினார்.

News September 4, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

image

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு (09.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப, தகவல். *ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

கரூர்: 25 தண்டாளுகளுக்கு மேல் எடுத்தவர்களுக்கு பரிசு

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் தினம் வருகின்ற (செப்டம்பர் 6) கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து காவலர்களும் பங்கேற்குமாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்சம் 25 தண்டாலுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொடர்புக்கு (AR DSP) 9944443392 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

News September 4, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 4, 2025

கோவை: SUPER PLAN ரூ.600க்கு இயற்கை சுற்றுலா!

image

கோவை மக்களே வனத்துறையால் குறைந்த விலையில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இதில் மூலிகை குளியல், பரிசல் சவாரி, அசைவ உணவு உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு பெரியவர்களுக்கு ரூ.700ம், குழந்தைகளுக்கு ரூ.600ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பாசமிகு கோவை மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

error: Content is protected !!