India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெ.யு. சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், செப்டம்பர் 8 அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமர் தேசிய தொழிற்பயிற்சி மேளா நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மேளா மூலம், பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூரில் நடந்த `உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், எஸ்.ஐ. பிரபாகரன் முதியவர் ஒருவரை தள்ளியது குறித்து, மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வெங்கடாபதி என்ற முதியவர் அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி எஸ்.ஐ. அமைதிப்படுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாட்டினங்களை தாக்கும் பெரியம்மை போன்ற தோல் கழலை நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி முகாம் செப்.,30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். அனைத்து கால்நடைகளுக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி, நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப்.04) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்
சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை சாம்பல்பட்டி ரயில்வே கேட் அருகே உள்ள விவசாயக் கிணற்றில், ஒரு ஆண் மற்றும் ஐந்து வயதுக் குழந்தையின் சடலங்கள் கிடந்தன. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடல்களை மீட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த பாலாஜி (37) மற்றும் அவரது மகன் கவின் (5) என்பது தெரியவந்தது. போலீசார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செப்டம்பர் 4ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த காவல் பணி ஆளுநர்கள் அரசு வழக்கறிஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். மொத்தம் 58 பேரை எஸ்.பி சிலம்பரசன் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருட்டு வழக்கில் குமார் (50) என்பவர் கைதாகி விசாரணை கைதியாக கடந்த ஜூலை முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமார் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.