India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் தினம் வருகின்ற (செப்டம்பர் 6) கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து காவலர்களும் பங்கேற்குமாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்சம் 25 தண்டாலுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொடர்புக்கு (AR DSP) 9944443392 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
கோவை மக்களே வனத்துறையால் குறைந்த விலையில் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இதில் மூலிகை குளியல், பரிசல் சவாரி, அசைவ உணவு உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு பெரியவர்களுக்கு ரூ.700ம், குழந்தைகளுக்கு ரூ.600ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரியில் நீர் நிலையை ஆக்கிரமித்து புதியதாக காவல் நிலையம் கட்டப்பட்டது. இதனால் நில ஆக்கிரமிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீர் நிலையை ஆக்கிரமித்த காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ளது பனப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் அருள் தாஸ் என்கிற குட்டி (வயது 50). இவருடைய மகன் ஜஸ்டின் (வயது 25). இன்று இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக குடி போதையில் இருந்த ஜஸ்டின் திடீரென வீட்டில் இருந்த கத்தி எடுத்து தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Representative பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <
தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிவகங்கையில் Sales Executive பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th முதல் டிகிரி முடித்தவர்கள் <
பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.