Tamilnadu

News May 7, 2025

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் தற்போது பீர் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது 4 ஆயிரம் பீர்பாட்டில் விற்பனை ஆகிறது.

News May 7, 2025

கடலூர்: பதக்கங்களை குவிக்கும் 13 வயது மாணவி

image

கடலுாரைச் சேர்ந்த 13வயது மாணவி யாழினி, டேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு நிலைகளில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார். மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாணவி யாழினி, புனித மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில அளவிலான போட்டிகளில் இதுவரை ஒன்பது முறை பங்கேற்று 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

News May 7, 2025

தி.மலை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

மத்திய அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.74-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 204 கிலோ மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அழுகவும்.

News May 7, 2025

திருவள்ளூர் அரசு ஊழியர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அரசு ஊழியர்கள் அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபடும்” எனவும் எச்சரித்துள்ளார்.

News May 7, 2025

தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

image

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

News May 7, 2025

கைதிக்கு செல்போன் வழங்கிய போலீஸ் பணி நீக்கம்

image

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் சண்முககுமார் (35). இவர் தண்டனை கைதியிடம் பணம் பெற்று மொபைல் போன், கஞ்சா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்த பின், கடந்த பிப்ரவரியில், சண்முககுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சண்முககுமாரை பணி நீக்கம் செய்து சிறை எஸ்.பி. வினோத் உத்தரவிட்டார்.

News May 7, 2025

குமரி மாவட்டத்தில் 1522 கேமராக்கள் நிறுவ முடிவு

image

குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.

News May 7, 2025

விருதுநகர் : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
▶️அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
▶️ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
▶️சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
▶️சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)

News May 7, 2025

கிருஷ்ணகிரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶️கிருஷ்ணகிரி SP தங்கதுரை- 9498157778,

▶️ADSP நமசிவாயம்- 8300037300,

▶️கிருஷ்ணகிரி DSP -9443779617

▶️பர்கூர் DSP – 8123951907,

▶️தேன்கனிக்கோட்டை DSP – 9498170606,

▶️ஓசூர் DSP – 8007506059,

▶️ஊத்தங்கரை DSP – 9443426675

குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News May 7, 2025

தூத்துக்குடி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தூத்துக்குடி SP- ஆல்பர்ட் ஜான் – 04612330111
▶️கோவில்பட்டி DSP – ஜெகநாதன் -9865695944
▶️சாத்தான்குளம் DSP – சுபகுமார் – 9498183830
▶️விளாத்திகுளம் DSP – அசோகன் – 8072667032
▶️ஸ்ரீவைகுண்டம் DSP – ராமகிருஷ்ணன் -9442587777
▶️திருச்செந்தூர் DSP – மகேஷ் குமார் -7708467248
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)

error: Content is protected !!