India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று (செப்.04) காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதாரமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (செப்.04) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ரூ.5,777க்கும், மக்காச்சோளம் ரூ.2,361க்கும், மணிலா ரூ.7,243க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது. கூடுதல் தகவல்கக்கு மேல் உள்ள புகைப்படத்தை காணலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரிகளிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். உதவி மையம் 7708385925, 9994340622, 8072050881
திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் கொடியினை முதன்மைக் கல்வி அலுவலர் செளந்தரராசன் அறிமுகம் செய்து வைத்து என்.எஸ்.எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணியிடம் வழங்கினார். அதன் படி அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அரசு, அரசு உதவி பெறும் தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ப.ஆசிரியர்கள், இ.நி.ஆசிரியர்கள் சி.ஆசிரியர்கள் மொத்த எண்ணிக்கை டேட் Qualified, tobe Qualified & 01.09.2025 முதல் 31.08.2030 வரை ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரம் https://forms.gle/kh5scடுh9SDH24F36 என்ற லிங்கில் பதிவிட கூறியுள்ளார்.
உச்சிப்புளி என்மனங்கொண்டான் பகுதியில் உள்ள காமராஜர் நகர் டிரான்ஸ்பார்மரில் நேற்று (செப். 3) உச்சிப்புளியை சேர்ந்த லைன்மேன் தர்மன் என்பவர் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி லைன்மேன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியின் உண்டு உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசிரேகா வெளியிட்ட செய்தி ஈரோடு மாவட்டத்தில் வெறிநாய்க்கடிகளுக்காக கடந்த மாதத்தில் 1503 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும், தீவிர பாதிப்பின் காரணமாக 69 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் தெரு நாய் கடி யில் இருந்து மக்களை பாதுகாக்க நாய்களுக்கு கருத்தடை செய்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் (23) என்பவர் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் அதனால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல்.கடந்த சில நாள்களுக்கு முன் ரோபிஸ் தாக்கி சேலத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சிறந்த உணவகம், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த பயண கூட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கு www.tntourismawards.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தகவல் அறிந்ததும், உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் தீயணைப்புத் துறை வீரர்கள் (ம) வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.