India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் நலம் கருதி இன்று மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்துள்ளார். மோகன் தற்பொழுது தனி வட்டாட்சியர், சந்திரன் தனி வட்டாட்சியர் நிலக்கோட்டை, முத்து விஜயபாண்டியன் தனி வட்டாட்சியர்(ஆ.தி ந), நவநீதகிருஷ்ணன் தற்பொழுது மதுபான கிடங்கு மேலாளர், சித்ரா தற்பொழுது வட்ட வழங்கல் அலுவலர் ஒட்டன்சத்திரம், பாமா தலைமை உதவியாளர்( ம.ஆ.அ)- மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் இன்று (செப்.3) காலை ஏற்பூட்டி உழுவதற்காக இரண்டு காளைகளுடன் கூலிக்கு மற்றொருவரின் வயலுக்கு சென்றார். அப்போது வயலில் மின்சார கம்பம் இருந்தது. அதில் இருந்து கம்பி நீரில் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் உழுதபோது, கம்பி மாட்டின் காலில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி இரு காளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் செப்டம்பர் 3 இன்று (சீட் பெல்ட் அணிவோம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) மிலாடி நபி விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். மீறி கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
கள்ளக்குறிச்சி ஒன்றியம், மேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மாபெரும் கன்று பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (03.09.2025) புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெறும் இப்பயிற்சிக்கு பட்டபடிப்பு முடித்த 18–35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
வேலூர் மக்களே தனியார் நிறுவனம் ஒன்று தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் Operations Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாதம் 30,000 வரை சம்பளம் வழங்குகிறது. மேலும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும், விருப்பமுள்ளவர்கள் விரைந்து <
Sorry, no posts matched your criteria.