Tamilnadu

News September 3, 2025

சாலைக்காக நிலத்தினை பத்திர பதிவு செய்த விவசாயி

image

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று (03.09.2025) அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த கிராமத்தில் 30 வருடங்களாக வசித்து வரும் 100 குடும்பங்களின் பயன்பாட்டிற்காக, சீதாராமன் மற்றும் கன்னிகம்மாள் என்ற இருவர் தங்கள் நிலத்தை சாலையாக தானமாக வழங்கியுள்ளனர். இவர்களது சமூகப்பணியை ஆட்சியர் பாராட்டினார்.

News September 3, 2025

E-Challan அபராத போல் தோன்றும் மோசடி எச்சரிக்கை

image

வாகனங்கள் சாலை விதிமுறைகளை மீறியதாக வாகனத்தின் மீது கேஸ் பதிவு செய்யப்படும் என வரும் E-Challan.apk File Install செய்துவிடச் சொல்லும் அபராத பணம் கட்டுங்கள் போன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம். இவை மோசடி. தவறி ஏமாற்றினால் 1930 இலவச எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in
என்ற வலைத்தளத்தில் புகார் அளிக்கவும்.

News September 3, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 48 புதிய மின்மாற்றிகள் மாற்றம்

image

நடப்பாண்ட்டில் 48 புதிய மின்மாற்றிகள் ஒரு கோடியை 68 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024 – 2025ம் ஆண்டு இலக்கீட்டின் படி சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 3, 2025

விழுப்புரம் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (செப்.03) நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர். சமர்ப்பித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்தார்

News September 3, 2025

சிமெண்ட் சாலையை திறந்து வைத்த ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டம், புதுகேசாவரம் ஊராட்சி மாந்தோப்பு கிராமத்தில் 100 குடும்பங்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இரண்டு நில உரிமையாளர்கள் 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். அரசுக்கு கிடைத்த இந்த நிலத்தில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 8.62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஆட்சியர் சந்திரகலா திறந்து வைத்தார்.

News September 3, 2025

விழுப்புரம்: திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

image

திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை திமுக கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக, திமுக கவுன்சிலர் ரம்யா மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News September 3, 2025

அன்புமணி நீக்கம் – ஆதரவாளார்கள் அதிர்ச்சி

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக-வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமதாஸ் தலைமையில் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், ராமதாஸ் படங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அன்புமணியின் படம் நீக்கப்பட்டதன் மூலம் ராமதாஸ்-அன்புமணி இடையிலான அரசியல் பிளவை வெளிப்படுத்துகிறது.

News September 3, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News September 3, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 3, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!