Tamilnadu

News September 3, 2025

சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீது விரைவு விசாரணை!

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News September 3, 2025

கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன் வழங்க ஏற்பாடு

image

நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரபதிவு அதிகளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் வழங்கப்பட்ட வந்து நிலையில், 200 ஆக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பு.

News September 3, 2025

சேல: 15 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது!

image

சேலம் மாவட்டத்தில் கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாபு, காமராஜர் நகர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷீலாதேவி உள்பட 15 ஆசிரியர்களுக்கு அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.செப்.05- ல் சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

News September 3, 2025

சேலம்: ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) செப்.09, 16, 23, 30 தேதிகள் தவிர வரும் செப்.30 வரை திண்டுக்கல் வரையும், மறுமார்க்கத்தில், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செப்.03, 10, 17, 24 தேதிகள் தவிர செப்.30 வரை திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும். செங்கோட்டை-திண்டுக்கல் இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 3, 2025

சேலம்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 109-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் செப்.12 மாலை 3 மணிக்குள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

image

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

News September 3, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, ஒரு மெயில் வந்தது. இதனை அடுத்து சேலம் மாநகர கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினர் தற்பொழுது ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். மூன்றாவது முறையாக தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பரபரப்பு நிலவு வருகிறது.

News September 3, 2025

புதிய ரயில் பாதை திட்டங்கள் முடக்கம்: அன்புமணி குற்றச்சாட்டு.

image

திண்டிவனம் – திருவண்ணாமலை உள்ளிட்ட புதிய ரயில் பாதை திட்டங்களை, தெற்கு ரயில்வே கிடப்பில் போட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நிலம் கையகப்படுத்தாமை மற்றும் நிதி ஒதுக்கீடு குறைபாடுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்களை விரைவில் செயல்படுத்த மாநில அரசு பங்காற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

News September 3, 2025

ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம், இயங்கும் அனைத்து உணவகங்களை இயக்கி வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் வகை தரத்திற்கு ஏற்ப உணவு பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தர சான்றிதழ் நிச்சயமாக பெற்று இருக்க வேண்டுமென அறிவிப்பு செய்துள்ளார். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியிட்டுள்ளார்.

News September 3, 2025

தர்மபுரி ஊடக வளர்ச்சி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் 70 ஜீப் ஓட்டுநர் 33 பதிவுத்துறை எழுத்தர் 151 அலுவலக உதவியாளர் 83 இரவு காவலர் உட்பட 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு www.trd.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!