Tamilnadu

News October 24, 2025

அரியலூர்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட கொள்ளிடம் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோர பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிகள் துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

நெற்குன்றத்தில் பாலியல் தொழில்- 55 வயதில் துணிச்சல்!

image

சென்னை நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகர், எட்டியப்பன் தெருவிலுள்ள வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், விபச்சார தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பாலியல் தொழிலில் நடத்தி வந்த ராஜா (55) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

News October 24, 2025

சேலம் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தற்போது மாநிலம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வண்ணம் உள்ளது. இதனால் சேலத்தில் மழையின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டார். காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும், காய்கறிகளை அதிக அளவு உண்ண வேண்டும், தேவையான மருந்து பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும், மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

News October 24, 2025

ராசிபுரம் வக்கீல் சங்க நிர்வாகி பலி!

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் (55).இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூவீலரில் சென்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 24, 2025

திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இன்று (அக். 23)ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் “உங்கள் செல்போனுக்கு வரும் OTP & CCTV எண்களின் விவரங்களை வங்கிகள் மற்றும் UPI, கட்டண நிறுவனங்கள் கேட்க மாட்டார்கள்” என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகளை தவிர்க்க இதன் மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டது.

News October 24, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News October 24, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் செல்போன் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

News October 24, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 24, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 24, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 100 அழைக்கவும்!

error: Content is protected !!