India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 8 மையங்களும். ரூ.20 லட்சம் மதிப்பில் 7 மையங்களும் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த மானியத்தைப் பெறுவதற்கான விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். SHARE IT NOW…
நம்ம தஞ்சாவூர் என்று சொன்னாலே பெருமைக்கு பஞ்சம் இருக்காது. அப்படியாப்பட்ட தஞ்சாவூரில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் இருப்பது பற்றி தெரியுமா?
✅தஞ்சை கோட்டை
✅தஞ்சை வீணை
✅தஞ்சை அகழி
✅தேர் நிறுத்தம்
✅தஞ்சை நால்வர்
✅கல்யாண சுந்தரம் பள்ளி
✅தாணிய களஞ்சியம்
✅சங்கீத மஹால்
✅சரஸ்வதி மஹால்
நம்ம தஞ்சைக்கு கிடைத்த இந்த பெருமைகளை நாம்தான் எடுத்து சொல்லனும்! மற்றவர்களும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!
கோவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 284 விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ▶️டவுன்ஹால்-உக்கடம்:சிவாலயா சந்திப்பு வழியாகச் செல்வபுரம் செல்லலாம் ▶️மேட்டுப்பாளையம் சாலை: உக்கடம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும் ▶️பேரூர்: செல்வபுரம் பள்ளி அருகில் திரும்பி,உக்கடம் செல்லலாம் ▶️தடாகம் சாலை: லாலி ரோடு வழியாகத் தடாகம் சாலைக்குச் செல்லலாம்.SHAREit
தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்கல், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு, சின்னாறு அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.
திருப்பத்தூர் மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
கிருஷ்ணகிரி மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) கெலமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. *இங்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசம்* ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரம் மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) பரந்தூர் வட்டாரத்தில் உள்ள ஏகனாம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
மயிலாடுதுறையில் கால்நடைகளுக்கு பெரியம்மை என்னும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் 01.09.2025 முதல் 21.09.2025 வரை கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது. இந்த நோய் தாக்கினால் பசு, எருமை போன்ற இனங்களை எளிதில் தாக்கக்கூடம். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் அம்மை போன்ற கட்டிகள் ஏற்படும். கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். உடனே உங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி சிறந்த வழியாகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் எல்லம்மாள் (63). இவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து கடந்த 13-ம் தேதி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று எல்லம்மாளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.