India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ரவி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போது, வல்லரசு அவரை வழிமறித்து சாவியால் மூக்கில் குத்தியுள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து போலீசார் நேற்று வல்லரசை கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புஷ்பலதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்து ரூ.2,26,87,900 ரூபாயை பறிமுதல் செய்தனர். வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட அந்த பணம் செங்கல்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,222 வாக்கு சாவடிகளில் 1,111 வாக்கு சாவடிகள் பதட்டமானவை . இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா, விடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானிசாகா் ஆகிய தொகுதிகளுக்கு கூடுதலாக கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் முக்கிய வீதிகளில் நடந்து சென்று இந்தியா கூட்டணியின் தி.மலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பொதுமக்களிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் முதல்வருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு

திண்டுக்கல் அடுத்த குழந்தைபட்டியை சேர்ந்த கட்டட காண்ட்ராக்டர் பாலமுருகன் (32), பழனியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற ரயிலில் வந்தபோது ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் அருகே நேற்று ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, தேனியில் நாளை நடைபெற உள்ள வாகனப் பிரசார ஊா்வலத்தில் (ரோட் ஷோ) உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கிறாா். நாளை 4 மணிக்கு தேனி வருகை புரியும் அவர் தேனி-பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலிலிருந்து மதுரை சாலை வழியாக பங்களாமேடு திடல் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறாா்.இதனால் அங்கு போலீஸ் குவிப்பு

மதுரை கோட்டத்தில் இந்த மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஏழாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 6: 25 மணிக்கு செல்லும் நெல்லை ரயிலும் நெல்லையிலிருந்து காலை 7: 35 க்கு புறப்படும் தூத்துக்குடி ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது .

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்கு சாவடி மைய எண் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் இன்று(ஏப்.3) தரும்புரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அன்புமணி இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.