Tamilnadu

News April 4, 2024

சிவகங்கையில் அமித்ஷா வாக்கு சேகரிக்க வருகிறார்

image

சிவகங்கை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை காலை 10மணியளவில் வாகனப் பேரணி செல்கிறார். பின்னர், பகல் 12 மணிக்கு தென்காசியிலும் , மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும் அமித் ஷா தலைமையில் வாகனப் பேரணி செல்ல இருப்பதாக தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.

News April 4, 2024

சொகுசு காரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

image

மதுரை மாவட்டம் இடையபட்டியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை நோக்கி வந்த சொகுசு காரை பரிசோதனை செய்தபோது காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 23 லட்சத்து 9 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை மதுரை கோட்டாட்சியர் ஷாலினி உத்தரவுப்படி வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

News April 4, 2024

சிதம்பரத்தில் உலா வரும் பானை

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியா கூட்டணி சார்பில் களம் காண்கின்றனர். அவருக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியது. அதற்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சிதம்பரத்தில் மிகப்பெரிய “பானை” அனைத்து பகுதிகளும் உலா வந்து கொண்டு இருந்தனர். அதனை பொதுமக்கள் சிறுவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

News April 4, 2024

வேளாங்கண்ணியில் திமுக செயல்வீரர் கூட்டம்

image

வேளாங்கண்ணியில் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற துணை தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் டயானா சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பேரூர் பகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் வாங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 4, 2024

அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு

image

மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக கட்சியின் தலைவர் பொன். முருகேசன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் பாதுகாப்பு தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளாமே என அறிவுறுத்தியது.

News April 4, 2024

குண்டர் தரப்பு சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு

image

கல்வராயன்மலை வட்டம், வாரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (33). இவருக்கு சொந்தமான நிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் மீது மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்ரல் 4) ஓராண்டு குண்டர் தரப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

News April 4, 2024

ஆட்சியர் தலைமையில் “காபி வித் கலெக்டர்”

image

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் 150-க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மற்றும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் “காப்பு வித் கலெக்டர்” என்ற 65-ஆவது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கினார்.

News April 4, 2024

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் வேகம் அதிகரிப்பு

image

திருவாரூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்கி வந்த ரயிலின் வேகம் இனிவரும் காலங்களில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே மூலம் தகவல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ரயில் பயனாளிகள் இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமென ரயில்வே துறையின் மூலம் ரயில் உபயோகிப்பாளர்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

புதுவையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு

image

புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, அரசு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதுவையில் 2023-24ஆம் கல்வியாண்டிற்கான 9 & 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. மாணவர்கள் 3 பாடங்களுக்கு குறைவாக தோல்வியடைந்தால் அவர்களுக்கு மறு தேர்வுகள் வருகிற 9ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!