Tamilnadu

News August 24, 2025

சிவகங்கையில் இபிஎஸ் மீது புகார்

image

சிவகங்கை: கடந்த 18.08.2025 அன்று எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் பிரசாரம் செய்தார். அப்பொழுது 108 ஆம்புலன்சில் நோயாளியை ஏற்ற சென்ற டிரைவர் சுரேந்திரனை எடப்பாடியார் கடுமையாக திட்டியுள்ளார். எனவே அவர் மீதும், டிரைவர் சுரேந்திரன் மற்றும் செல்போனை பறிக்க முயன்ற நபர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத்திடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் புகார் கொடுத்துள்ளனர்.

News August 24, 2025

கோவையில் ஏமாற்றப்பட்டவர்களா நீங்கள்?

image

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

News August 24, 2025

கள்ளக்குறிச்சி: இருதரப்பின் இடையே தகராறு

image

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கடைகள் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு தரப்பினர் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீரென படுத்துக்கொண்டு சாலை மறியல் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

News August 24, 2025

பேரிடர் மீட்பு பயிற்சி பெற்றோரை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி

image

கூடலூர் காந்திதிடலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற இளைஞர் அணி தொண்டர்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மாவட்டத்தலைவர் வாப்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வி.கே.அனீபா தொகுத்து வழங்கினார். இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கைச்சேர்ந்தோர் திரளாக கலந்து கொண்டனர்.

News August 24, 2025

உத்தமபாளையம்: சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினரான கம்பம் சுரேஷ் பாண்டி (23). என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி அளித்த புகாரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ் பாண்டி போக்சோ பிரிவில் வழக்கு (ஆக.23) பதிவு.

News August 24, 2025

டிராக்டரில் சென்றவர் உயிரிழப்பு

image

காரிமங்கலம் அடுத்த திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி திப்பம்பட்டி சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சின்னசாமி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News August 24, 2025

திருநெல்வேலிக்கு கனிமொழி MP வருகை

image

நேற்று (22/08/2025) திருநெல்வேலிக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி கருணாநிதி MP வருகை தந்துள்ளார். திருநெல்வேலிக்கு வருகை தந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க வருகை தந்துள்ளார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவர், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் VSR.ஜெகதீஷ் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

News August 24, 2025

வாக்குப்பதிவு இயந்திரங்களை அய்வு செய்த ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்க. இதில், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கரன், நகராட்சி ஆணையர் ரமேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்கிற சேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 24, 2025

தக்காளி விலை திடீர் உயர்வு

image

கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால்,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே தக்காளி வரத்தாகிறது. கடந்த மாதம் கிலோ, 40 ரூபாய் வரை விற்ற ஒரு கிலோ பெரிய ரக தக்காளி தற்போது, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 30 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

News August 24, 2025

கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து

image

சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆக.25(நாளை) காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (எண்: 66613) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) அன்றைய தினம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!