India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவே தேர்தல் – 2024 அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சந்திரமோகன், பெரம்பலூர் தொகுதி முழுவதும் 29.03.2024 அன்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும் என என்ஆர் காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓம் சக்தி ரமேஷ் மற்றும் உப்பளம் தொகுதி தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பேச்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி பாமக நகர தலைவர் கார்த்தி, முன்னாள் நகர தலைவர் குமார் உள்ளிட்ட சீர்காழி பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் 100% வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாகனத்தின் மூலம் குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிபரப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சந்தீஷ் தலைமையில் நேற்று மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஏடிஎஸ்பி அருண் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

போளூர் அருகே களம்பூர் திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயலாளர் வி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் அகமதுபாஷா , தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் எம்.அப்துல் லத்தீப் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராராந்திமங்கலத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு கோலப்போட்டி (ம) மெஹந்தி போட்டி யை திட்ட இயக்குனர் முருகேசன் துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் இந்திராணி, வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

நெல்லை பாராளுமன்ற முன்னாள் காங்கிரஸ் எம்பி ராமசுப்பு நேற்று (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் செய்தார், நேரம் ஆகிவிட்டதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை காலை 10 மணி அளவில் கொக்கிரகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ராமசுப்பு செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 11வது நாளான நேற்று இரவு கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் சூரனை வென்ற முருகப்பெருமானுக்கு கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் ஒன்றியம் பள்ளப்பட்டி ஊராட்சி முருகபவனம் பகுதிகளில் நேற்று சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம் என்றார்.
Sorry, no posts matched your criteria.