India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், வேளாண் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு மனுக்களுடன் வரும் பொது மக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து வந்தனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ, கூல்டிரிங்ஸ் கடைகளிலும் வியாபாரம் சரிந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எஸ்.டி.இசை, தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நேற்று(மார்ச் 21) அசோகன் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று(மார்ச் 21) சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்த அசோகன், வாழ்த்து பெற்று தனது நன்றியை தெரிவித்தார். இதில் மு.அமைச்சர் கே.பி.அன்பழகன், பூக்கடை ரவி, பொன்னுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று பெரியகுளம் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் மார்ச் 24ம் தேதி பயிற்சி அளிக்க இருப்பதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் திருவிழா நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. அவற்றின் பாதுகாப்பு பற்றி நேற்று அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கோவில் செயல் அதிகாரி சீதாராமன் தலைமையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி-1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பம்மல் தெற்கு பகுதிக்குட்பட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 21) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு நாளை (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் நாளைக்கு பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வையம்பட்டியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏடிஎம்-ற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை தணிக்கை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38 இலட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.