Tamilnadu

News March 30, 2024

சென்னையில் 20 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணி

image

சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவிட்டு உள்ளார் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

News March 30, 2024

அணைக்கட்டு தொகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

மக்களவை தேர்தலில், வேலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று(மார்ச் 30) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

திருவாடனை: கருவாட்டுக் கம்பெனியில் தீ விபத்து

image

ராமநாதபுரம், திருவாடானை தாலுகா சோளியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான கருவாட்டு கம்பெனியில் நேற்று(மார்ச் 29) இரவு திடீரென தீ பற்றியுள்ளது. தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான குழுவினர், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திறகு பின் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

News March 30, 2024

மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

image

பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். மலை மீது ரூ.100 கட்டணம் தரிசன வழியில் இரண்டு மணி நேரமும் நேரமும், கட்டணமில்லா பொது தரிசனம் வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

News March 30, 2024

திருவள்ளூர்: 4.38 லட்சம் லிட்டர் ஆயில் பறிமுதல்

image

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

News March 30, 2024

வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

image

ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல் தலைமையிலான பறக்கும் படையினர் மையனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய சில குழுவினர், அதிகாரிகளை பார்த்து பொருட்களை விட்டுச் சென்றனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா,  6 பறவைகளை மீட்டனர். 

News March 30, 2024

சோதனை சாவடியில் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று இரவு வாஞ்சுயூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்களா சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News March 30, 2024

பிரபல நடிகை கோவிலில் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல சீரியல் நடிகைக்கு சிறப்பான வரவேற்பும் கோவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ஏராளமான குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

News March 30, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 30, 2024

விருதுநகர் அருகே விபத்து; இருவரின் நிலை?

image

அருப்புக்கோட்டை அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (24). இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி தனது நண்பர் ராம்குமார் என்பவர் உடன் பைக்கில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமலிங்காமில் அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!