India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது

வேலூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.66 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பாளையில் வெப்ப அளவு 99.68°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) திருத்தணியில் வெப்ப அளவு 100°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது நேற்று இரவு அவ்வழியே வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியதில் பலத்த சேதம் அடைந்த மின்கம்பம் உடைந்தது. இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது.

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39). இவரை அதே ஊரைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் அவதூறாக பேசி மிரட்டிய தாக்கினார். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் படி மானூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி ஆனந்தராஜை தாக்கிய முருகனை இன்று (ஏப்ரல் 1 ) கைது செய்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல்1) இரவு தாழையூத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்தவேனில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து பேசினர். அப்போது அவர், அ.ம.மு.க. தொண்டர்கள் நயினர் நரேந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆற்காடு பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரவாக உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை விளக்கி அதன் கூட்டணியை சார்ந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி, வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க இன்று சென்றுள்ளார். மீன் வலையில் சிக்கும் மீனை தனது வாயால் எடுக்கும் பழக்கம் கொண்ட செல்லமுத்து நேற்று தன் வலையில் சிக்கிய மீனை வாயால் எடுக்க முயன்ற போது மீன் தொண்டையில் சிக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி நேற்று இண்டூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதில் தருமபுரி கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் தடங்கம், சுப்பிரமணி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.