India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரதிநிதி நாகராஜன் முன்னிலையில் பேராவூரணியை சேர்ந்த ஜெ. மணிகண்டன் என்பவர் 18 நிமிடங்களில் 558 தோப்புக்கரணம் செய்து சாதனை படைத்தார். அவருக்கு அதற்கான சான்றிதலும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் கலந்துகொண்டார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு தாலுகாவில் உள்ள வெள்ளப்பள்ளம் வானவன்மாகதேவியில் இன்று காலை 11 மணியளவில் திடீரென வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இது என்னவென்று தெரியாமல் அலறி ஊர்மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர். இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி நீண்ட நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி, திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,துண்டு பிரசுரங்களை வழங்கி, பேரணியில் கலந்து கொண்டு சென்றார்.

திருச்சியில் ஒரே நாளில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர், அதிமுக, அமமுக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இந்த அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஒரே நாளில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் இது வரை 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்று அரக்கோணம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் மும்பையை சேர்ந்த 3 பெண்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் கிழித்துள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்த இருவர் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர் மூன்று பெண்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் இல்லத்தில் திமுக வேட்பாளர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். அருகில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா , சிற்றரசு உட்பட பலர் இருந்தனர்.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு ஏர்போர்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா என்பவர் சிவசண்முகம் என்பவரை தனது கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதால், ஆத்திரமடைந்த சிவசண்முகம் உமாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கு, இன்று திருச்சி 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில், இன்று நேரடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கோரிக்கை வந்தவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மருத்துவ பணியாளர்களை அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா உடன் நிர்வாகிகள் மருத்துவர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.