Tamilnadu

News March 29, 2024

அதிமுக, பாஜக சுவர் விளம்பரம்..அதிருப்தி!

image

முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் மறைக்காகோரையாறு பாலம், உப்பூர் பஸ் ஸ்டாண்ட் கட்டிடம், ஆலங்காடு படித்துறை பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்களில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் பெயரளவில் வெள்ளை சுண்ணாம்பு கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த விளம்பரம் அப்படியே தெரிகிறது. இதனால் மாற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு அதிருப்தியடைந்துள்ளனர்.

News March 29, 2024

புதுவை: 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

image

தொண்டமாநத்தம் சமாதி தெருவில் நேற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையில் அவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அப்போது, சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மாதிரி களை அதிகாரிகள் ஆய்வுக் காக எடுத்து சென்றனர்.

News March 29, 2024

இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம் இன்று கீழையூர் கிழக்கு ஒன்றியம் திருப்பூண்டியில் பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடம் இந்தியா கூட்டனி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்கு சேகரித்தார். உடன் கீழையூர் திமுக கழக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். திருப்பூண்டி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

News March 29, 2024

வெடித்து சிதறிய சிலிண்டர்கள்: பணிகள் தீவிரம்

image

ஆரணியில் பிரபல பேக்கரியில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

News March 29, 2024

செஞ்சுரி அடித்த வெயில்

image

திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் குடை பிடித்துக் கொண்டும் ஹெல்மெட் அணிந்தும் செல்கின்றனர்.  இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட், 37.7 டிகிரி செல்சியஸ்யாக பதிவாகியுள்ளது.

News March 29, 2024

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News March 29, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தகவல்!

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 27-ம் தேதி வரையிலும், மொத்தம் 41 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

ஆம்பூர் வந்த வில்லன் நடிகர்

image

ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை முன்பு இன்று மாலை 6 மணியளவில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அவருடன் சென்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

News March 29, 2024

நீலகிரி: கல்லூரி முதல்வர் மீது லஞ்ச வழக்கு பதிவு

image

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் அருள் ஆண்டனி. பேராசிரியாக இருந்தவர் ரவி. இருவரும் மாணவர்களிடம் துறை மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று(மார்ச்.29) வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 29, 2024

காஞ்சிபுரம்: பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

image

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் ஆகியோரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 3 மற்றும் 4 ஆம் தேதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

error: Content is protected !!