Tamilnadu

News April 6, 2024

திருப்பத்தூரில் 40 டிகிரியை தொட்டது வெயில்

image

திருப்பத்தூரில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 6, 2024

கடலூர்:சிறுமி கர்ப்பம்; வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

image

கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடலூர் மகளிர் போலீசில் நேற்று (ஏப்ரல் 5) மாலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை நேற்று இரவு கைது செய்தனர்.

News April 6, 2024

பிரதமர் வருகை – 4500 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் 10ம் தேதி பிரதமர் மோடி வேலூருக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை ஏடிஜிபி சுரேஷ் தலைமையில் 4500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

News April 6, 2024

பாஜகவிற்கு சைவ வேளாளர் சங்கம் ஆதரவு

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.6) பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்பொழுது நெல்லை சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

News April 6, 2024

ஈரோட்டில் 41.2 டிகிரியை தொட்டது வெயில்

image

ஈரோட்டில் வெப்பம் 41.2 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

News April 6, 2024

மீண்டும் களம் இறங்கும் தொகுதி மீட்புக் குழு

image

புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மீட்புக் குழு தொடங்கப்பட்டது.மேலும் குழுவினால் 2009ஆம் ஆண்டு நாட்டில் முதல் முறையாக நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் விழுந்தன. 2014இல் 51 ஆயிரம் வாக்குகளும்,2019இல் 43 ஆயிரம் வாக்குகளும் தொகுதி மீட்புக் குழு மூலமாக நோட்டாவிற்கு விழுந்தன.இந்த நிலையில் மீண்டும் தொகுதி மீட்புக் குழு தற்போது களமிறங்கி நோட்டாவிற்கு தீவிர பரப்புரை செய்துவருகின்றனர்

News April 6, 2024

ராம்நாடு கலெக்டர் எச்சரிக்கை

image

14 வயதுக்குட்பட்ட சிறாரை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்துதல் சட்டபடி குற்றம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரத்தில் சிறாரை பங்கேற்க செய்தால் வேட்பாளர்கள், முகவர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

சித்திரை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்

image

மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட எஸ்பி அர்விந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் சார்ந்த ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News April 6, 2024

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ

image

மயிலாடுதுறை, குத்தாலம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேரழுந்தூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசலில் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபு பவுன்ராஜை ஆதரித்து அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பூம்புகார் எம்எல்ஏவுமான எஸ்.பவுன்ராஜ் பள்ளிவாசல் ஜமாத்தார்களை ஆரத் தழுவி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு ஆதரவு திரட்டினார்.

News April 6, 2024

சென்னை கிளைமேட் என்ன..?

image

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!