India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நெல்லித்துறையை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த் என்பவருடன் இணைந்து பாக்கு மட்டை மிஷின் வாங்கி அடித்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் தொழிலில் இருந்து விலக முடிவு எடுத்து மிசின் வாங்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதி கொண்டனர். இப்புகாரின் பேரில் சுரேஷ்குமார், உதயகுமார், ஐயப்பன் உட்பட 7 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் தொகுதியில் 15978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1122 போ தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதேபோல் 85 வயது நிரம்பிய 14035 மூத்த வாக்காளர்களில் 1184 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவா்களிடம் தபால் வாக்குகள் பெற நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1125 மெட்ரிக் டன் யூரியா சென்னை மணலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. இதனை விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், சாத்தூர் பெரியார் நகரில் வசிக்கும் 99 வயதுடைய மூத்த வாக்காளர் ராமசாமிதேவர் என்பவர் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு, தபால் வாக்குச்சீட்டு மூலம் வீட்டில் இருந்தபடியே தவறாமல் ஜனநாயக கடமையாற்றியதை பாராட்டி, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இன்று (06.4.2024) அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் ஆதரித்து நாளை (ஏப்ரல் 7) வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டி வீதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகள் சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாளை (ஏப்.7) ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காலை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் பாஜகவினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய காந்தி சிலை அருகே இன்று காலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விசிக நிர்வாகியான துறைமங்கலம் வழக்கறிஞர் மணிமாறன் – பிரியதர்ஷினி ஆகியோரது பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வி என பெயர் சூட்டினார்.

ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் நந்தகுமார் (62). இவரது மகன் மோத்தி (44) ஐ.டி.ஊழியர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அங்குள்ளவர்கள் இன்று சித்தோடு போலீசாருக்கு தெரிவித்தனர். பின் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது நந்தகுமார் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக இருந்துள்ளார். சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான விவசாயிகளும் பங்கேற்று 100% வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.