India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் இருவர் இன்று (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தேசிய நிர்வாகி வானமாமலை ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்தினை இன்று திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவாரூர் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹரிஷ் இன்று (27.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆஷா அஜித் அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழிகாட்டுதலின் படி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மைய கட்டிடத்தில் வாக்கு பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் மையத்தை தெரிந்து கொள்ள சுவரில் சட்டமன்ற தொகுதி எண், பாகம் எண் எழுதும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி போன்ற பொருட்களையும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

மக்களவை 24 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவுற்றது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இது வரை 58 பேர் தங்களது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர் கடைசி நாளான இன்று ஓரே நாளில் மட்டும் 31 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மக்களவை தேர்தலையொட்டி வாணியம்பாடி அருகே பதற்றமான வாக்குச்சாவடிகள் கோணமேடு , கோவிந்தபுரம், முஸ்லிம்பூர் , தும்பேரி, அழிஞ்சி குளம், கவுக்கப்பாட்டு , பெத்தகல்லுபள்ளி , செட்டியப்பனூர், மதாஞ்சேரி , ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை இன்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, கூடலூர் குன்னூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கிரண், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சந்திப் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் சம்பந்தமான புகார்கள் இருப்பின் 9489930709, 9489930710 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.