India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டம் R.M காலணியில் உள்ள (WANTS SKILL SKY SCHOOL) இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்த பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் தையல் பயிற்சியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்களது செலவீன கணக்குகளை சமர்ப்பித்தல் தொடர்பான விளக்கக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில், மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் ராணி லாமா, மதுமிதா தாஸ் முன்னிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச்.30) கட்சி வேட்பாளர்களுக்கான சின்னங்களும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை புரூக் பீல்டு வர்த்தக வளாகத்தில் இன்று (மார்ச்.30) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மகளிர்கள் 100க்கும் மேற்பட்ட கோலம் வரையப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு மகளிர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தேனி மக்களவை தொகுதியில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, இன்று வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாளாகும். அதன்படி இன்று சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மீதமுள்ள 25 பேர் தேனி தொகுதியில் போட்டியிடுவதாக ஆட்சியர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி 23 வேட்பாளர்கள் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்ட சின்ன மற்றும் அவரது புகைப்படத்துடன் கூடிய பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (மார்ச் 30 வெளியிட்டார். இதில் பாஜக முதல் இடத்திலும் பகுஜன் சமாஜ் கட்சி 2வது இடத்திலும் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும் அதிமுக 4வது இடத்திலும் உள்ளது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயர் 7வது இடத்தில் உள்ளது.

வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசை விமர்சித்து, முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால் அவர்களை கைது செய்ய குஜராத் வரை விமானத்தில் தமிழக காவல்துறை செல்கிறது. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்கிறது. இப்படி காவல்துறையை, தங்களது ஏவல் துறையாக முதலமைச்சர் பயன்படுத்தி வருவது வேடிக்கையாக இருக்கிறது என்றார்.

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.

செஞ்சி, மேல்மலையனூர் ஒன்றியம், கப்ளாம்பாடி மற்றும் தாழங்குணம் ஆகிய ஊராட்சிகளில் இந்திய கூட்டணி சார்பில் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் M.S.தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்திற்கு இன்று வாக்குகள் சேகரித்தார்.
இதில் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் மற்றும் கழக மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.