Tamilnadu

News April 3, 2024

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

image

வெள்ளகோவில் பகுதியில் 10 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் வெள்ளகோவில் பகுதியில் தேர்தலை சமூகமாக நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 3, 2024

வெயில் கொளுத்துவதால் காலையில் பிரச்சாரம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால் வேட்பாளர்கள் பகல் நேரங்களில் பிரச்சாரம் செய்ய சிரமப்படுகின்றனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். காலை 7 மணி முதல் திருநெல்வேலி சந்திப்பு, சிந்து பூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி, தாழையூத்து பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

News April 3, 2024

திருவள்ளூர்: வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் வாசு விக்ரம்

image

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் இன்று (ஏப்ரல் 3) திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திரைப்பட நடிகரும், திமுக தலைமை கழக பேச்சாளருமான வாசு விக்ரம் வாக்கு சேகரித்தார். மேலும் இந்த நிகழ்வில் எம்எல்ஏ சந்திரன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

News April 3, 2024

நீலகிரி: பதற்றமான வாக்கு சாவடியில் கலெக்டர் ஆய்வு

image

கூடலூர் சேரம்பாடி கண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதை நேற்று (ஏப்ரல் 2) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, எஸ்பி சுந்தரவடிவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

News April 3, 2024

100% வாக்குப்பதிவு: இருளர் இன மக்களிடம் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை உள்வட்டம் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியான மூன்றாம்பட்டி தளபதி நகரில் நேற்று (ஏப்ரல் 2) மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, நாடக கலைஞர்கள் மூலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

News April 3, 2024

தேர்தல் செலவின பதிவேடுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் குறித்த ஒத்திசைவுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஏப்ரல் 5, 10, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஹீரா ராம் சௌத்ரி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் வேட்பாளர்கள் செலவின பதிவேடுகளை சமர்ப்பித்து ஒத்திசைவு செய்ய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

கடலூர் அருகே பன்றி தொல்லை

image

விருத்தாசலம் மணிமுத்தாறு, குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவை அங்குள்ள கழிவு நீர் வாய்க்கால், குப்பைகளை மேய்ந்து வீடுகளில் அருகாமையிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் வலியுறுத்தி உள்ளனர்.

News April 3, 2024

மதுரை: தந்தை கண்முன்னே மகன் துடி துடிக்க கொலை 

image

சோழவந்தானை சேர்ந்தவர் சந்தனகுமாா்(27). இவருக்கும், திருமால்நத்தம் வினீத்குமாரின் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று சந்தனகுமாரும் அவரது தந்தை பெருமாளும் பைக்கில் வந்தபோது வினீத்குமார் உள்ளிட்ட 3 கொண்ட கும்பல் சந்தனகுமாரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது. தடுக்க முயன்ற அவரது தந்தை பெருமாள் காயமடைந்தார்.

News April 3, 2024

திருவாரூர்: தெப்ப உற்சவ தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி தேரோட்டம் திருவிழா கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில் வருகிற மே 23, 24, 25 ஆகிய மூன்று தினங்கள் கமலாலயம் குளத்தில் புகழ் பெற்ற தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது என ஆலய நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கலந்துகொள்ளுமாறும் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News April 3, 2024

புதுகையில் சுட்டரிக்கும் கோடை வெயில்

image

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப்.3)வெயிலின் அளவு 27 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 23 முதல் 36 மற்றும் 37 வரை இருந்து வந்த வெப்பநிலை தற்போது 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!