Tamilnadu

News April 5, 2024

ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், நீலகிரி தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தி வருகின்றனர். குன்னூர் தனியார் பள்ளிக்கு வந்து இறங்கிய ஹெலிகாப்டர் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நேற்று ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.

News April 5, 2024

வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வு கலெக்டர் ஆய்வு

image

நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, 85-வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 5, 2024

வாக்களிப்பது குறித்து மராத்தான்

image

திருத்தணியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வலியுறுத்தி, இன்று காலை 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் தீபா, காவல்துறை டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

News April 5, 2024

தாளவாடி அருகே பயங்கர தீ விபத்து

image

தாளவாடி அடுத்து அண்ணா நகர் பகுதியில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான மட்டை மில் இயங்கி வருகிறது. இன்று மதியம் திடீரென இந்த மட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த அனைத்து இயந்திரங்களும் நார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வாகனம் வராததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

News April 5, 2024

மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை அறிக்கை!

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.5) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் தாங்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன்,லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

News April 5, 2024

3 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இ-பைலிங் முறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று, ஏப்ரல் 6, 8 ஆகிய 3 நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்வது என்றும், மீண்டும் திங்கட்கிழமை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்தனர்.

News April 5, 2024

திருவண்ணாமலை: தேநீர் கடையில் நூதன பிரச்சாரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (05.04.2024) திமுக இளைஞரணி சார்பில் C.N அண்ணாதுரை அவர்களுக்கு வாக்கு கேட்டு தேநீர் கடையில் டீ போட்டு கொடுத்து நூதன பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

புதுவைக்கு மாநில அந்தஸ்து.. காங்கிரஸ் வாக்குறுதி

image

நாட்டில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டது. இந்நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

News April 5, 2024

தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி

image

தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு இன்று என்ஆர்பி செவிலியர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் அனைத்து பொதுமக்களும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தலில் அனைத்தும் பொதுமக்களும் 100 சதவிதம் வாக்களிப்பது அவசியம் குறித்து செவிலியர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 5, 2024

ராணிப்பேட்டை: புதிய மெமு ரயில்

image

சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது. இது மூர் மார்க்கெட்டிலிருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு அரக்கோணம் செல்லும். பின் அரக்கோணத்திலிருந்து பிற்பகல் 2.25-க்கு புறப்பட்டு மாலை 5:00-க்கு சென்னை வரும். வழித்தடம்: பேசின் பாலம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு

error: Content is protected !!