India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக திருமாவளவன், பாஜக கார்த்தியாயினி, அதிமுக சந்திரகாசன், நாதக ஜான்சிராணி உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே சகாயம் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன்.இவர் கல்வி துறையில் கண்காணிப்பு அலுவலராக ஒய்வு பெற்றவர்.இயற்கை உபாதை கழித்துவிட்டு வாளியில் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியே கொட்டும் அவல நிலையில் கடந்த 25 ஆண்டு காலமாக போராடி வருகிறார்.சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் கால்வாய் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருவதாகவும் கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்கவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளார்

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மாலை வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசிய கட்சிகள்,அங்கிகாரம் பெற்ற மற்றும் பெறாத கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேர் ஈரோடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேட்புமனு பரீசீலனை இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

புதுச்சேரியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 31-ந் தேதி மாலை புதுச்சேரியில் வில்லியனூர் கிழக்கு மாட வீதி, மரப்பாலம், அண்ணா சிலை சதுக்கம் ஆகிய மூன்று இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் மது விற்ற காளிமுத்து (35), சுப்பிரமணி (44) ஜெயா (48), ரவீந்திரன் (65), திருமுருகன் (29), கார்த்திக் (42), பழனிச்சாமி (70), ராஜ்குமார் (32), ஜெயா (48) உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 191 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் பாதுகாப்பில் காவல்துறையுடன் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கடலூர், சப்-ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04142-220732 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி வினா போட்டி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் 30- ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.பதிவு செய்ய இன்றே (28-03-2024) கடைசி நாள்.போட்டியில் முதல் பரிசுக்கு 25,000, இரண்டாம் பரிசுக்கு 15,000, மூன்றாம் பரிசுக்கு 10,000 ருபாய் வழங்கப்படுகிறது.

ஆலங்குடி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேஷ் அவரது மகன் ரோகித் இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிய போது அந்த வழியாக மேலப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் அதேபகுதியை குணா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேஷ், ரோகித், விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.