Tamilnadu

News April 8, 2024

காஞ்சிபுரம்: தபால் ஓட்டு பெறும் பணி இன்று தொடக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.8) முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட 1039 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 612 பேர் என, மொத்தம் 1651 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்குகளை பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

நாமக்கல்லில் இன்று இதற்கு தடை

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் கே.பி ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கவும் உள்ளிட்ட காரணங்களுக்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை தர உள்ளார். எனவே அவரின் வருகையையொட்டி இன்று 8ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்குள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

திருவாரூர்: இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

image

திருவாரூர், மன்னார்குடி காரிக்கோட்டை அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார், தேவேந்திரன். இருவரும் மன்னார்குடியில் இருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, மேலவாசல் அருகே கட்டுப்பாட்டை இழந்த பைக் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கை ஓட்டிய தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 8, 2024

நாகை: தலை நசுங்கி உயிரிழந்த இளைஞர்

image

திருவாரூர் மாவட்டம், அதங்குடி பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ்(21) நாகை, தோப்புத்துறையைச் சேர்ந்த தமிழரன் என்பருடன் காருக்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்வுக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருக்குவளை அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியில் மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னால் இருந்த தமிழரசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

News April 8, 2024

கொதிக்கும் தேநீரை ஊற்றிய கொடூர சம்பவம்

image

நாகமலை புதுக்கோட்டை அருகே மேலக்குயில்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் அருகில் தேநீர் கடை நடத்தி வரும் சுந்தரபாண்டிக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது ஈஸ்வரியின் மகன் தெய்வேந்திரன் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியின் மனைவி பவானி கொதிக்கும் தேநீரை தெய்வேந்திரன் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

News April 8, 2024

வேலூர் சிறையில் கைதி மயங்கி விழுந்து பலி

image

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (53). இவருக்கு பெண் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று (ஏப்ரல் 7) சிறையில்  மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த சிறை காவலர்கள் வேலூர்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News April 8, 2024

திருக்குறுங்குடி கோவிலில் வெடிகுண்டு சோதனை

image

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தி உள்ளனர். பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவுபடி நேற்று (ஏப்.7) களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் பகுதியில் மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் முன்னெச்சரிக்கையாக தீவிர சோதனை நடத்தினர்.

News April 8, 2024

வாணியம்பாடி அருகே நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

image

வாணியம்பாடி அடுத்த காவாய் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30).  இவர் நேற்று விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணி அளவில் புல்லூர் அடுத்த கனக நாச்சி அம்மன் ஆலயம் பாலாற்றில் குளிக்கச் சென்றார்.  அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News April 8, 2024

தூத்துக்குடியில் 534 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை ஒட்டி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்த 534 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக நேற்று ஆட்சியரின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

பழனி கோவிலில் குவிந்த பக்தா்கள்

image

பங்குனி உத்திர திருவிழா, தொடா் விடுமுறை காரணமாக பழனி மலைக்கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். தீா்த்தக்காவடி எடுத்து வந்த பக்தா்களுக்கு கோயில் சாா்பில் தரிசனத்துக்கு தனிவழி அமைக்கப்பட்டிருந்தது. பழனி கிரிவீதியில் பேட்டரி காா்கள் இயக்கும் பேருந்து பற்றாக்குறையாக இருந்ததால், விடுமுறை நாள்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!