India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் 19வது
ரோஜா கண்காட்சி ஆகியவை இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சிகள் மே 19ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கி 12 தேதிவரை 3 நாள் நடைபெறுகிறது. உதகை நகரம் மூன்று நிகழ்ச்சிகளால் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இன்று (மே 10) ஊட்டி மலர்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அறிவித்துள்ளார்.

ஊட்டியில் கோடை சீசனின்போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டின் 137வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதற்காக சென்னை, பெங்களூரு உட்பட பல மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான
நீலகிரிஸ் டெர்பி மே 12ம் தேதி நடக்கிறது. டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சட்டத்தின் பரிணாம வடிவங்கள் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நேற்று நடந்தது.பள்ளியின் செயலாளர் மீனா தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

புதுவையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 229 பள்ளிகளைச் சோ்ந்த 12, 613 மாணவ, மாணவிகளும், 599 தனித் தோ்வா்களும் எழுதியுள்ளனா் . காரைக்கால் பிராந்தியத்தில் 60 பள்ளிகளைச் சோ்ந்த 2, 479 மாணவ, மாணவிகளும், 259 தனித் தோ்வா்களும் என மொத்தம் 2, 738 பேரும் எழுதியுள்ளனா் . தோ்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு கல்வித் துறை இணையத்தில்
வெளியிடப்படுகிறது

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று இளங்கலை (பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் ) மற்றும் நான்கு இளம் அறிவியல் (பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் , வேதியியல் மற்றும் இயற்பியல்)பாட பிரிவுகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 6-ம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் மே 20-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், ஜாவா, 3 டி ‘அனிமேஷன் அண்ட் ஸ்பெஷல் எபக்ட்ஸ் ‘ குறித்த பயிற்சி ஜூனில் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவசம். இதர பிரிவினருக்கு குறைந்த கட்டணம். முன்பதிவுக்கு: 86956 46417 அழைக்கவும்

பெரம்பலூர் சீனிவாசா செவிலியர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் திருச்சி SRM பல்கலைக்கழகத்தில் மே 7 அன்று நடைபெற்ற உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளான கேரம் போர்டு, கால் பந்து ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் 2ம் பரிசு வென்றனர். அந்த மாணவர்களை நேற்று(மே 9) தனலட்சுமி சீனிவாச பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி பரிசு வழங்கினார்.

சேலம் மாவட்டம் மணி விழுந்தான் காலனி பகுதியை சேர்ந்த அழகுத்துரை என்பவர், நேற்று(மே 9) அதிகாலை 3 மணியளவில் ஆத்தூர் நோக்கி டேங்கர் லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் ஆட் கொல்லி பாலம் அருகே வரும்போது செந்தில்குமார் என்பவர் வீட்டின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி அருகே கீழதிருத்தங்களில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து தொடர்பாக சிவகாசி போலீசார் போர்மென் சுரேஷ் பாண்டியன், குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.