India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ உள்ளிட்ட விஞ்ஞான கூடங்களில் இருப்பது கூட தெரியாமல் அண்ணாமலை கூமுட்டையாக உள்ளார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளுக்கடை , பூலாம்பட்டி கொங்கணாபுரம் , மூலப்பாதை, செட்டிமாங்குறிச்சி, சித்தூர் மற்றும் எடப்பாடி புறவழிச் சாலை ஆகிய பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி, மரப்பாலம் வசந்த் நகரில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல், ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு வருகிற 19ஆம் தேதி தமிழகத்தின் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் கிராம மக்கள் தங்கள் கோயில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதை கண்டித்து மக்களவை பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான பேனர்களை தங்கள் கிராமப் பகுதியில் கட்டி உள்ளனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர்களிடையே 100 % வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்லதுரை தலைமை வகித்தாா். இதில் பெரம்பலூா், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர களப்பணியில் ஈடுபடுவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஜானகிபுரம் ரயில்வே கேட் திறக்க கோரி அப்பகுதி பெண்கள் இன்று(மார்ச் 31) ஒப்பாரி போராட்டம் நடத்தினர். ஜானகிபுரம் ரயில்வே கேட் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதை பராமரிப்புக்காக மூடப்பட்டது. அப்பகுதி பொதுமக்களின் பிரதான சாலையாக ரயில்வே கேட் இருப்பதால் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இன்று ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2 ஆம் தேதி திருப்பத்தூர் அவுசிங் போர்டு காந்தி சிலை அருகே திறந்த வேனில் பிரச்சாரம் செய்கிறார் என திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 4ம் வீதி தென்புறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை விழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.31) நடைபெற்ற அன்னதான நிகழ்வினை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.