Tamilnadu

News May 11, 2024

50க்கும் மேற்ப்பட்டோர் திமுகவில் ஐக்கியம்

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கெலமங்கலம் மேற்கு ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லியூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்த விலகி ஒசூர் மாநகராட்சி, தளி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக ஒசூர் M.L.A பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து எம்எல்ஏ அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

News May 11, 2024

கோவை: ஒரே நாளில் 100 கிலோ தங்கம் விற்பனை

image

இந்தியா முழுவதும் நேற்று அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. தங்கம் விலை உயர்வாக இருந்தாலும் தங்க நகைகளை இந்த சுப நாளில் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்க நகைகளை வாங்க மிகுந்த ஆர்வத்தை இந்த ஆண்டும் காட்டியுள்ளனர். நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 100 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள் விற்பனை ஆகி உள்ளதாக இன்று தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 11, 2024

ஈரோடு: வேன் கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 9- வது கொண்டை ஊசி வளைவில் மினி டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேனில் பயணம் செய்த 15 க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த விபத்து குறித்து ஆசனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

திருச்சி: ஹோட்டலில் தகராறு செய்த நபர்கள்

image

பெருகமணியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலையில் இருந்தபோது பூபாலன், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேர் உணவு சாப்பிட்டு விட்டு பணம் தராததால் ராஜசேகர் பணம் கேட்டதில் அவர்கள் 3 பேரும் இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் ராஜசேகரை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

News May 11, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், “கிராமப்புற மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி புனரமைக்கப்பட வேண்டும், குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

News May 11, 2024

இசை பயிற்சி வகுப்புகளில் சேர ஆட்சியர் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான இசை பயிற்சி வகுப்புகளில் சேர ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசு பண்பாட்டு மையத்தின் மூலம் நாதஸ்வரம் தேவாரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, விலையில்லா கணினி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் இன்று (மே.11) தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

வேலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

image

பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி 50 பயணிகளுடன் இன்று (மே 11) சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூர் மாவட்டம் பொய்கை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

குன்னூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மரப்பாலம் அருகே 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஒரு பிக்கப் லாரி ஆக்ஸல் உடைந்து நடு ரோட்டில் நின்றது. அதை கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்தும் வளைவில் சிக்கியது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிக்கப் லாரியில் இருந்த பொருட்களை இறக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து பயணிகள் லாரியை தள்ளி நிறுத்திய பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

News May 11, 2024

ஸ்ரீவைகுண்டம்: மர்ம நபர்களால் வெட்டி கொலை

image

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள புதுக்குடி சேர்ந்த காளிமுத்து (43).குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன் அவரை பிரிந்து கூட்டாம்புளியில் வசித்து வருகிறார். நேற்று இரவு வெள்ளூர் பஸ் ஸ்டாப் அருகே காளிமுத்து மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News May 11, 2024

தி.மலை அருகே சோகம்

image

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களான ஷாலினி, ஷோபனா பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று தனது தந்தையிடம் பேசிய பேசியபோது தந்தை கோபமாக திட்டியதால் சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

error: Content is protected !!