India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறையில் தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி செம்மங்குளம் பகுதியை சுற்றி பொருத்தப்பட்ட தானியங்கி கேமராவில் சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்றுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மீது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை நேரில் சந்தித்து சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் புகார் மனு அளித்தார்

மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போது கோடைகாலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அதிக ஆழம் கொண்ட நீர் நிரம்பியுள்ள பகுதிகளான ஏரிகள், ஆறுகள், குட்டைகள் மற்றும் கிணறுகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி சிறார்களை பெற்றோர் கண்காணிக்க தவற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்று காரைக்கால் மாவட்டத்தில் வீடு வீடாக நேரடியாக சென்று அவர்களிடம் தபால் வாக்கினை பெரும் பணி துவங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நிரவி – திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி தபால் மூலம் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேதாரண்யம் RDO அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறையாக காவல்துறையினரால் பாதுகாக்கப்படுகிறதா என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். பின் காப்பு அலுவல் புத்தகத்தில் கையெழுப்பமிட்டு பார்வையிட்டார்.

மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வின் போது பாரம்பரிய முறைப்படி தோல் பையில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் முன்பதிவு செய்வது கட்டாயம். என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நெல்லித்துறையை சேர்ந்த சுரேஷ்குமார், அரவிந்த் என்பவருடன் இணைந்து பாக்கு மட்டை மிஷின் வாங்கி அடித்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் தொழிலில் இருந்து விலக முடிவு எடுத்து மிசின் வாங்க கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதி கொண்டனர். இப்புகாரின் பேரில் சுரேஷ்குமார், உதயகுமார், ஐயப்பன் உட்பட 7 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் தொகுதியில் 15978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1122 போ தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இதேபோல் 85 வயது நிரம்பிய 14035 மூத்த வாக்காளர்களில் 1184 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவா்களிடம் தபால் வாக்குகள் பெற நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக 1125 மெட்ரிக் டன் யூரியா சென்னை மணலியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயில் மூலம் நேற்று வந்தது. இதனை விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.