India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை புறநகர் ஆனையூர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர்களை தி.மு.க. வஞ்சித்து ஏமாற்றி வருகிறது” என விமர்சித்தார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இன்று தொடங்கி உள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (40) என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 154 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் , பொதுமக்கள் இத்தேர்தலில் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி இன்று அறிவித்துள்ளார்.

லாஸ்பேட்டை அவ்வை நகரில் நேற்று வீடு வீடாகச் சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்து, இரண்டு வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து, தனது தனிப்பட்ட தேர்தல் திருவிழா அழைப்பினை வழங்கி, தவறாமல் வாக்களிக்குமாறும் மற்றவர்களையும் வாக்களித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வேட்பாளர்கள் வாக்குப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம், ஊர்வலம் ,பொதுக்கூட்டங்கள், ஊடக வாயிலாகவோ பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் அடுத்த மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பாவாடைக்காரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது. நேற்று அம்மன் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை விநாயகா சட்ட கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஸ்காலர்ஷிப் தேர்வில் நெல்லையைச் சேர்ந்த மாணவி வினிஸ்டா 100% தேர்ச்சி பெற்று முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாணவிக்கு சட்டம் படிப்பதற்கான அனைத்து உதவிகளும் ஸ்காலர்ஷிப் மூலம் வழங்குவதற்கான ஆணைகளை கல்லூரி டீன் அனந்த பத்மநாபன் நேற்று (ஏப்ரல் 16) வண்ணாரப்பேட்டை தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இலட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 2024 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் 2 ஆம் நாளான நேற்று சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.