Tamilnadu

News March 31, 2024

கடலூரில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பிரச்சாரம்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடலூரில் வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

நாகை சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம்

image

நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதில் சுயேட்சை வேட்பாளரான விஜயராகவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே நாகை சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்குகள் சிதறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

News March 31, 2024

வாக்கு சேகரிப்பில் குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ்

image

குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து கோபாலபுரத்தில் நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது பால்கனியில் நின்ற பெண் ஒருவர் குஷ்புவை பார்த்து கை காட்டினார். பதிலுக்கு குஷ்புவும் கையசைத்தார். இதனால் உற்சாகமான அந்த பெண் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

News March 31, 2024

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து 

image

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும், மின்துறை தனியார்மயமாக்கப்படாது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

News March 31, 2024

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

image

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

News March 31, 2024

புதுச்சேரி பிரச்சாரத்தில் பரபரப்பு

image

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

News March 31, 2024

கிரிக்கெட் விளையாடிய பாஜக வேட்பாளர்

image

நீலகிரி, குந்தா தாலுக்கா, மஞ்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர், மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று மாலை 3 மணியளவில் சென்றார். அப்போது அங்கு விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள். அதை பார்த்த வேட்பாளர் எல்.முருகன் மைதானத்தில் இறங்கி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். இளைஞர்கள் அமைச்சருடன் படம் எடுத்துக்கொண்டனர்.

News March 31, 2024

புதுவை விபத்து: கான்ட்ரக்டர், சூப்பர்வைசர் மீது வழக்கு பதிவு

image

மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

புதுவையில்: 90 % வாக்கு வரவேண்டும்

image

கதிர்காமம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அறிமுக கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. எம்எல்ஏ கேஎஸ்பி. ரமேஷ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது. புதுவையில் மக்கள் நல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதனால் தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கலாம். மேலும் 80 முதல் 90 சதவித வாக்குகள் நமக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

News March 31, 2024

தேசிய போட்டியில் திண்டுக்கல் மாணவன்

image

பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!