India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டம் நகராட்சி பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடி மையத்தினை இன்று, பொது தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக் ஐஏஎஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அரங்கநாதன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மதுரை கேகே. நகரில் ஜிம் நடத்தி வரும் மனோஜ் பாபு என்பவரிடம் ஜவஹா்லால்புரத்தைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் தொழில் செய்வதாகக் கூறி முதலீடாக ரூ.57.52 லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் ரூ.18 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் ஐசக் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரை கொட்டாம்பட்டி அருகே ம.வெள்ளாளப்பட்டியில் கடந்த 3 ஆம் தேதி மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவரை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100 கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரில் சு.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மண்டபம் பேரூரில் இன்று மாலை வாக்கு சேகரித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் 2 இடத்தில் பளீச் என தெரியும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் வேண்டும் என ஜெயபெருமாள் பேசினார்.
மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலர் அப்துல் ஜெமீல் கூட்டணி கட்சியினர்
பங்கேற்றனர்.

ராயக்கோட்டை போலீசார் கெலமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வன்னியபுரம் தனியார் தொழிற்சாலை முன்பு சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் நல்லராலப்பள்ளியை சேர்ந்த ஜெயப்பா மகன் சங்கர்(38) என்பதும், அவர் கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், நீலகிரி தேர்தல் பறக்கும் படையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தி வருகின்றனர். குன்னூர் தனியார் பள்ளிக்கு வந்து இறங்கிய ஹெலிகாப்டர் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நேற்று ஹெலிகாப்டரை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் ஏதும் கிடைக்கவில்லை என்றனர்.

நாமக்கல், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதிகளில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, 85-வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தணியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வலியுறுத்தி, இன்று காலை 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் தீபா, காவல்துறை டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

தாளவாடி அடுத்து அண்ணா நகர் பகுதியில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான மட்டை மில் இயங்கி வருகிறது. இன்று மதியம் திடீரென இந்த மட்டை மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த அனைத்து இயந்திரங்களும் நார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வாகனம் வராததால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்.5) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் தாங்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன்,லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.