Tamilnadu

News April 14, 2024

எட்டயபுரம் : சித்திரை பொன்னேர் திருவிழா

image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தில் சித்திரைமாத பிறப்பை முன்னிட்டு பொன்னேர் திருவிழா இன்று நடந்தது. இதில் விவசாயிகள் தங்களது டிராக்டரை கொண்டு விவசாய நிலங்களில் இந்த வருடத்தில் முதல் முறையாக உழுவது வழக்கம். இதில் மேல ஈரால் கிராமத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது டிராக்டரை கொண்டு விவசாய பணியை துவக்கினர்.

News April 14, 2024

கோயம்பேடு மார்கெட்டில் பூ விலை உயர்வு

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகாலை முதலே சிறுவியாபாரிகள் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதில் மல்லி (ம) ஐஸ் மல்லி ₹500, காட்டு மல்லி ₹400, முல்லை, ஜாதிமல்லி ₹450, கனகாம்பரம் ₹1000, ₹சாமந்தி 300, சம்பங்கி ₹250, அரளிப்பூ ₹400, பன்னீர் ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 என விற்கப்பட்டது.

News April 14, 2024

கி வீரமணி அமைச்சர் நேரு சந்திப்பு

image

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திராவிட கழக தலைவர் வீரமணியை திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பெரியார் மாளிகையில் அமைச்சர் கே என் நேரு இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News April 14, 2024

திருச்சி:  தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருச்சி கோட்டத்தில் ஈரோடு- திருப்பூர் இடையே ஈங்கூர்- ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள விஜயமங்கலம் ரயில்வே யார்டில் இன்ஜினியரிங் பணிகள் நடைபெறுவதால் திருச்சி- பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத, பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16843) ரயில் நாளை 15,4.24. மதியம் 1மணிக்கு திருச்சியில் இருந்து ஈரோடு வரை தான் செல்லும். பாலக்காடு செல்லாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 14, 2024

சிதம்பரத்தில் போக்சோவில் வாலிபர் கைது

image

சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கிள்ளையை சேர்ந்த 21 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் தற்போது அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூவழகி தலைமையில் நேற்று விசாரணை நடத்தி வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News April 14, 2024

தொழிலாளி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

image

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தினசாமி கடந்த 2018 ஆம் ஆண்டு டிச.27 ஆம் தேதி டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோரால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை 3 வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வழக்கு விசாரணை முழுமையாக முடிவுற்று நேற்று நீதிபதி பத்மா டேவிட், ஆனந்தகுமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News April 14, 2024

சீமான் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, துறையூர், நம்பர்1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் பெரம்பலூர் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொண்டனர். 

News April 14, 2024

தஞ்சையில் தயாராகும் வாக்கு எண்ணும் மையம்

image

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதனையடுத்த தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

News April 14, 2024

பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

image

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

News April 14, 2024

விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திருச்சுழி அருகே கனையமறித்தான் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன்(58). இவர் நேற்று தேளி – தர்மம் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது  திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.‌ இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!