India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த ஒரு வாரமாக மக்களைச் சந்தித்து திமுகவினருடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, டிஜிட்டல் முறையிலும் விசிகவை அதிகளவில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கியூஆர் குறியீடு மூலம் அந்தக் கட்சி சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1974 முதல் 1977ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கோல்டன் ஜூப்ளி விழாவை இன்று கொண்டாடினர். இதற்கு கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பின் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமு கஅமைச்சர் ஐ.பெரியசாமியிடம், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தது அரசியலையும் கடந்து நட்புடன் பழகுவதை கண்ட அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அருகிலிருந்த திமுக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வை அண்ணன் என, அருகில் இருந்து மேயர் இளமதியை அக்கா என அறிமுகப்படுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) அதிகபட்ச வெயிலாக இன்று 106.3°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதுவை வன்னியர் பாதுகாப்பு பேரியக்கம் சார்பில் அறிமுக கூட்டம் வில்லியனுர் கோபால்சாமி நாயக்கர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக இயக்கத்தின் நிறுவனர் செந்தில் கவுண்டர் தனது ஆதரவை நமச்சிவாயத்திற்கு தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருப்புகலூர் காசிநாதன் மனைவி ஆனந்தவள்ளி (வயது 54). இவர் நேற்று தனது மகளின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் ஏறி வந்துள்ளார். வரும் வழியில் திடீரென ஆனந்தவள்ளிக்கு ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் இன்று உயிரிழந்தார். திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெஸ்கி உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. மேலும் தேர்தலை கையாளும் முறையை பற்றி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்று இருந்தது. அதற்கு வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை. மேலும் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.
Sorry, no posts matched your criteria.