India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் அருகே உள்ள புளியந்தோட்டத்தை சேர்ந்தவர் ராமன்(33). இவர் தனது உறவினரான பள்ளி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாணவி படிக்கும் பள்ளிக்கு வழக்கமான ஆய்வுக்காக சென்ற சுகாதார செவிலியரிடம் மாணவி அளித்த தகவலின் பேரில் உறவினரான ராமன் நேற்று மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பழகி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக முகமதுஆரிப் (21) என்ற வாலிபரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை என 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். அதன்படி கோவை மக்களவை தொகுதியில் 3 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. எனவே, திண்டுக்கல்லில் இருந்து நேற்று ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.6) இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. பாளையங்கோட்டையில் நேற்று நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் ஒருவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்றும் அங்கு சோதனை நடந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கேலோ இந்தியா உமன்ஸ் வூசு லீக் போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பகவதி நகர் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட ரேஷ்மி வெண்கலப் பதக்கம் வென்றார். இவருக்கு ஜம்மு காஷ்மீரின் துணை கண்காணிப்பாளர், இந்திய தேசிய தலைமைப் பயிற்சியாளர் குல்தீப் ஹான்டூபாரட்டி சான்றிதழ், பதக்கம், கசோலையுடன் விருது வழங்கினர்.

தேனி மக்களவை தொகுதியில் மொத்தம் 253 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 353 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அவற்றில் வாக்கு சாவடி நுண்பாா்வையாளா் குழு நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த வாக்குச் சாவடி பகுதியில் கூடுதல் எண்ணிக்கையில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு வாக்குப் பதிவு நடவடிக்கைகள் முழுமையாக விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படும் என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி இன்று (ஏப்.6) காலமானார். சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அவர் நேற்று விக்கிரவாண்டியில் ஸ்டாலின் வருகையையொட்டி ஏற்பாடுகளை கண்காணிக்க வந்த நிலையில் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி சற்றுமுன் இறந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டிவெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் புதுக்கோட்டை வந்துள்ளனர். நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.பயணிகளின் பைகளில் மெட்டல் டிடெட்டர் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தனர்.வெடிகுண்டு தடுப்பு காவல் உதவி ஆய்வாளர் அருணகிரி தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு நேற்று இரவு 9.45 மணிக்கு கடலூர், ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் முதல்வர் தங்கினார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நாடுகள் சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு யயாதி பெருவிழா வருகின்ற 9ம் தேதி செவ்வாய்க்கிழமை நாமக்கல் பரமத்தி ரோடு எஸ் பி எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.சங்கத்தின் தலைவர் ஜெய வேங்கடசுப்பிரமணியன் விழாவை தொடங்கி வைக்கிறார்.பொருளாளர் தங்கவேலு செயலாளர் நாராயணன் மற்றும் மாவட்ட இளைஞரணி,மகளிர் அணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது
Sorry, no posts matched your criteria.