Tamilnadu

News April 13, 2024

ஓட்டுப்பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை

image

புதுவை மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.

News April 13, 2024

பானையுடன் வாக்கு சேகரிக்கும் ஒன்றிய சேர்மன்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இன்று (ஏப்.13) காலை பானை சின்னத்திற்கு மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் வாக்கு சேகரித்தார். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இளைஞர் ஒருவர் தலையில் பானையை சுமந்தபடி சுற்றி வருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

News April 13, 2024

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களில் உள்ள பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறி மது விற்பனை செய்தால்  சட்டபடி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்பி அழைப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டி ஏப்ரல் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் காவல்துறை தீயணைப்பு துறை, வனத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்கலாம். தேர்தல் பணிக்கு வர விரும்புவோர் 9363868465 தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

News April 13, 2024

மூதாட்டியை ஆரத் தழுவிய பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் இன்று (ஏப்.13) நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்பொழுது அங்குள்ள முதியவர் ஒருவரை ஆரத் தழுவி தங்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வெற்றி பெற்ற பின்பு நிறைவேற்றி தருவதாக நயினார் நாகேந்திரன் வாக்குறுதி அளித்தார்.

News April 13, 2024

கண்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலி

image

எண்ணூர், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்சல், ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று மாலை பாரத் நகரில் இருந்து சுனாமி குடியிருப்பு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எர்ணாவூர் மேம்பாலம் அருகே வந்தபோது அவரது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2024

மீறினால் குற்ற நடவடிக்கை: நீலகிரி கலெக்டர்

image

நீலகிரியில் உள்ள மதுபான கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும், மக்களவைத் தேர்தலை ஒட்டி வருகிற ஏப்ரல் 17, 18, 19 தேதிகள் மற்றும் மகாவீர் ஜெயந்தியான 21ஆம் தேதி மூடப்படும். இதை மீறி, மது விற்பனை செய்தால் மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

News April 13, 2024

கிருஷ்ணகிரி: டூவீலர் கவிழ்ந்து விவசாயி பலி

image

தளி அடுத்துள்ள காலனட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36) விவசாயி. இவர் டூவீலரில் மதகொண்டப்பள்ளி கக்கதாசம் சாலையில் சம்பவம் அன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்தது. படுகாயமடைந்த சதீஷை அங்கிருந்தோர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் இறந்தார். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News April 13, 2024

திருச்சி: எட்டரை ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு

image

திருச்சி குழுமணி அருகே அதிமுக பிரமுகர் அன்பரசனின் மனைவி, எட்டரை ஊராட்சி தலைவரான திவ்யா. அவரது வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரித்த வருமான வரித்துறையினர் இன்று திவ்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News April 13, 2024

‘கண்டுபிடிப்புகளுக்கு அரசு உதவ வேண்டும்’

image

திருச்சி என்ஐடியில் புத்தகத்தின் சக்தி மற்றும் பயோ மெடிக்கல் கருவிகள் எனும் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் டிஆர்டிஒ பிரமோஸ் திட்ட முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் பேசுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகள் எந்த காலத்திலும் சுணக்கம் அடையாது. சிறந்த எதிர்காலம் உள்ள இந்த மூன்று துறைகளிலும், மாணவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!