Tamilnadu

News April 11, 2024

மின்னணு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

image

தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெறுவதை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 11, 2024

வேட்பாளர்கள் பெயர்கள் சின்னங்கள் பொருத்தும் பணி

image

திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன்,அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News April 11, 2024

நாகையில் அதிரடி காட்டிய பறக்கும் படை

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி ஆர்ச் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரி சுந்தர் ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி தாலுகா மடப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உரிய ஆவணங்களின்றி தனது ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற ரூ.59,610-ஐ பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News April 11, 2024

சமயபுரம் கோவிலில் இவ்வளவு காணிக்கையா.!

image

மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்க பணமாக ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 585, தங்கம் 1 கிலோ 296 கிராமும், வெள்ளி 2 கிலோ 579 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 114 மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் 1288 காணிக்கையாக கிடைக்கப் பெறப்பட்டன.

News April 11, 2024

நெல்லை: தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை

image

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். நெல்லை பாராளுமன்ற தேர்தலில் காங். வேட்பாளர் ஆதரித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ களக்காடு பகுதியில் நேற்று (ஏப். 10) இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். அதில் அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 11, 2024

கள்ளக்குறிச்சி: அதிரடியாக கைது செய்த போலீசார்

image

கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வழக்கம் போல் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் கிருபா கணேசன் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

News April 11, 2024

பிரபல நடிகர் மீதான மோசடி வழக்கு ஒத்திவைப்பு

image

தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News April 11, 2024

ஏப்ரல் 13 ஆம் தேதி பந்தக்கால் உற்சவம்

image

உலக புகழ் பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், சித்திரை வசந்த உற்சவம் வரும் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் ஆறு மணி வரை பந்தக்கால் உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 11, 2024

அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் 

image

தருமபுரி மக்களவைத் தொகுதி
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக பாமக வேட்பாளர் முனைவர். சௌமியா அன்புமணியை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பொம்மிடி
பேருந்து நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூறாவளி பிரச்சாரம் செய்தார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம், பிவி செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News April 11, 2024

திருப்பத்தூர்: 5 அடி நீளம்… அலறிய தம்பதி

image

ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டை சேர்ந்த தேவேந்திரன் – ரம்யா தம்பதி. இவர்களது வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு அலறியடித்து ஓடிய தம்பதி, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!