Tamilnadu

News April 10, 2024

கோவையில் இன்று 36 டிகிரி செல்சியஸ் வெப்பம்

image

கோவை மற்றும் மதுரையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், மார்ச் மாதத்தின் பல நாட்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதே போல் மதுரையிலும், வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இன்று கோவையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும், நாளை 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

News April 10, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

கரூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திட, குடிநீர் பிரச்சனைகள், நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப் திட்டத்தை மீண்டும் கொண்டுவர இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளர்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News April 10, 2024

திருச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி.!

image

திருச்சி ஏர்போர்ட்டில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கச்சத்தீவு குறித்து பேசும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்”ஹெவி வாட்டர்”என்றால் என்னவென்று கேளுங்கள். இதெல்லாம், ராணுவம் சம்பந்தப்பட்டது. இந்திராகாந்தி கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார் என்று சிலர் கூறுவது தவறானது என்றார்.

News April 10, 2024

வாகனம் மோதி உயிரிழந்த புள்ளிமான்

image

திருமயம் அரசு குடோன் அருகே திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையை புள்ளி மான் ஒன்று நேற்று சிலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே செத்தது. இதனை அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மான் உடலை மீட்டனர்.

News April 10, 2024

விருதுநகர் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேயர்..!

image

சிவகாசி மாநகர் பகுதியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிகள் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் முழுவதும் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.

News April 10, 2024

தேசிய தடகள போட்டியில் 3 தங்கம் வென்ற  மாணவர்

image

மேலூர் அருகே வெள்ளரிபட்டியைச் சேர்ந்த யோக சஞ்சய்(23) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கிறார். இவர் டெல்லியில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில்
10 கிமீ மற்றும் 5 கிமீ தனிநபர் ஓட்டம், தொடர் ஓட்டம் என 3 தங்க பதக்கங்களை வென்றார். இந்த வெற்றியால் நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் இவர் பங்கேற்க உள்ளார். இன்று ஊர் திரும்பிய இவரை வெள்ளரிப்பட்டி கிராம பொதுமக்கள் வரவேற்றனர்.

News April 10, 2024

தென்காசியில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று மாற்றுதிறனாளி வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

News April 10, 2024

அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

திருவாரூர், திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் இன்று (10.4.2024) நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்ஜித் சிங் சங்கரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் திருத்துறைப்பூண்டி நகர கழக செயலாளர் டிஜி சண்முகசுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதில் அதிமுக நகர பொறுப்பாளர்கள் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

News April 10, 2024

நாமக்கல்: திருநங்கைகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

image

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வழியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தலைமையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 10, 2024

வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்

image

இந்திய விவசாயிகள் சங்க தலைவர் குருசாமி, ஓய்வு பெற்ற வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் பொன்னுச்சாமி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விவசாயத்தை நீர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தோடு இணைத்து லாபகரமாக்கி வெற்றி கண்ட வேப்பங்குளம் மாடலை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

error: Content is protected !!