India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1680 வாக்குச்சாவடிகளில் 186 வாக்குச்சாவடிகள் பிரச்சனைகளுக்கு உரியவை, 2 வாக்குச்சாவடிகள் பதற்றம் ஆனவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வாக்கு சாவடிகளில் நேற்று மாலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதைத்தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.இதில் ஏராளமான காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக கந்திர்பாவை (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலராக இருந்தார். இந்நிலையில் நேற்று(ஏப்.5) பணி நேரம் முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

பேராவூரணி அருகே பெருமகளூரில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று நடைபெற்ற சோதனையில், பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 620 மதுபாட்டில்களையும், 680 லி. எரிசாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார் குழியில் ஊற்றி அழித்தனர். இது தொடர்பாக தீனா, பாலமுருகன், சேகர், வீரன், ராஜ்குமார், சங்கர் ஆகிய 6 பேர் கைதாகினர்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து மருத்துவக்குழு முண்டியம்பாக்கம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் இன்றைய தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். பொன்முடி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று(ஏப்ரல் 06) பெரம்பலூர் தலைமை அஞ்சலம் அருகே நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் புகலூர் அருகே பொன்னியாக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுந்தரி. இவர் சேமங்கி பகுதிக்கு சென்றபோது அவரது மாமா மோட்டார் சைக்கிளை விக்னேஷ் குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இது குறித்து கேட்ட போது வாக்குவாதம் முற்றி விக்னேஷ் குமார், ரவி, இந்திரா, முனியம்மாள், சத்யா 5 பேரும் சுந்தரியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் 5 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவட்டார் அடுத்த மாத்தாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(50). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் 31ம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு மாத்தாரில் உள்ள உறவினரான சுரேஷ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த நிலையில், ஏப்.4ம் தேதி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.

வண்டலூர் உயிரியல் பூங்கா ஏப்.9ம் தேதியான செவ்வாய் கிழமையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய் கிழமைகளில் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும் நிலையில், தெலுங்கு புத்தாண்டையொட்டி ஏப்.9ம் தேதி அரசு விடுமுறை என்பதால் உயிரியல் பூங்கா செயல்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை தொகுதியில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வரும் ஏப்.10ஆம் தேதி பாரத பிரதமர் மோடி காரமடை அருகே உள்ள தென்திருப்பதி நால்ரோடு டிகேவி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.