India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரையில் இருந்து 24.03.2024 (இன்று) 23.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண். 12687 மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில், 52 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால், 25.03.2024 (நாளை) மதுரையில் இருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் இதை முன்வைத்து பயணங்களை திட்டமிட அறிவுறுத்தியுள்ளது.

அரியலூர், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஒட்டு வில்லையினை பேருந்து கண்ணாடியில் ஒட்டியும், பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஷ்ரவன் குமார் இன்று ஆய்வு செய்தார்.

மக்களவைத் தோதலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பிற பகுதியைச் சோந்த வாக்காளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று தோதலின்போது வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். டி பிளாக் ஆர்.ஆர்.டவர் முன்பு இருந்து காலை ஊர்வலமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் அஇஅதிமுக-SDPI கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா SDPI கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் ஸலாஹுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அஇஅதிமுக கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தி.மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வருகை தர உள்ளார். கீழ்பென்னாத்தூர் ஊர் எல்லையில் வரவேற்க திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நகர செயலாளர் அன்பு தெரிவித்தார்.

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் இன்று மாலை 5.30 மணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

செங்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்று உள்ளது இந்த வாகனங்கள் மூலம் தினமும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.. இந்நிலையில், ரோந்து வாகனம் அடிக்கடி பழுதாகி தள்ளும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவல்துறையினர் ரோந்து பணிகள் சரிவர செய்ய முடிவதில்லை என புகார் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.