India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அழகர் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அழகர் மலை அடிவாரத்தில் இருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 86 பேர் மற்றும் அவர்களின் விசை படகுகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று விஜய் வசந்த் எம்பி அப்பகுதிக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் மீட்டு குமரிக்கு அழைத்து வந்தார். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எம்பி நன்றி தெரிவித்தார்.

புதுச்சேரியில் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வருவது வழக்கம். ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனித் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் இதனை எடுத்து பழனி மலைக்கோயிலின் உச்சி கோபுரத்தின் மீது நிலவு அருகே தெரிந்து ரம்மியாமாக காட்சியளித்தது இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது .இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது

திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, வேடசந்தூர், ஆத்தூர், விளாம்பட்டி, எரியோடு, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு மது விற்ற கருணாநிதி (49), பெருமாள் (47)ரவி (47), சதீஷ்குமார் (38), முருகன் (63), முருகேசன் (43), விஜயன் (56), பால்ராஜ் (36), இளையராஜா (35), மாரியப்பன் (45), சிலம்பரசன் (34), செல்வம் (61),அழகு ராஜபாண்டி (36), சேவுகன் (58) 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, பேசுகையில் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார் ஆனால் ஒரு சவரன் கொடுப்பார் என தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் மிகவும் பிரசத்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் காவடி எடுத்து வழிப்பட்டனர் பெண்கள் அலகுகுத்தி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது.ஆனால் அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்.நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூடவழங்கவில்லை.தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 44 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4வது கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.